முன்னாள் முதல்வர் மகன் கொலை விவகாரத்தில் மனைவி கைது!

என்.டி.திவாரி மகன் கொல்லப்பட்ட வழக்கில் அவர் மனைவி அபூர்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநில முதல்வராக இருந்தவர் என்.டி.திவாரி. இவரது மகன் ரோகித் சேகர் திவாரி, அபூர்வா என்பவரைத் திருமணம் செய்த கொண்டு தனியாக வசித்து வந்துள்ளார்.

கணவன் மனைவி இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஒரே வீட்டில் இருவரும் பேசாமல் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி ரோகித் சேகர் திவாரி மூக்கில் ரத்தம் வழிந்து மயங்கி விட்டதாக அவரது அம்மா உஜ்வா லாவுக்கு போன் சென்றது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ரோகித் உடல், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில், ரோகித் கழுத்து நெரிக்கப்பட்டிருப்பதும் மூச்சுத்திணறி இறந்திருப்பதும் தெரியவந்தது. அவர் மரணம் இயற்கையானது அல்ல என்றும் மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளதால் இதைக் கொலை வழக்காக போலீசார் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ரோகித்துக்கு அபூர்வாவிடம் இருந்து வீடியோ கால் வந்துள்ளது. வேலைக்காரப் பெண், அந்த வீடியோ அழைப்பை ரோகித்திடம் கொடுத்துள்ளார். இதையடுத்து ரோகித் மயக்கம் அடைந்த சமயத்தில், வீட்டில் ரோகித் மனைவி அபூர்வா, உறவினர் சித்தார்த் மற்றும் வேலைக்காரப் பெண் வீட்டிலிருந்துள்ளனர். இதைத் தொடர்ந்து ரோகித் மனைவி அபூர்வாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் முன்னுக்குப் பின் முரணாகத் தகவல் தெரிவித்ததால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் வலுத்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கு குற்றப் புலனாய்வு காவல்துறையினருக்கு மாற்றப்பட்டது.

இது குறித்து ரோகித் திவாரியின் அம்மா உஜ்வா லாவோ, அபூர்வா ரோகித்தை திருமணம் செய்து கொள்ளும் முன், வேறொருவருடன் பழகிவந்தார். எங்கள் சொத்து மீது அபூர்வா குடும்பத்துக்கு ஆசை இருந்தது. அதை அபகரிக்க முடிவு செய்தனர். இது குறித்த உண்மையை விரைவில் வெளியிடுவேன்’ என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here