மீண்டும் குழப்பத்தை ஆரம்பிக்கும் சத்தியலிங்கம் குரூப்!

வடமாகாணசபை செயற்பாட்டை மீண்டும் குழப்பும் முயற்சியொன்றை ப.சத்தியலிங்கம் ஆரம்பித்துள்ளார். வவுனியாவை சேர்ந்த சில மாகாணசபை உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு, இந்த குழப்ப முயற்சியில் இறங்கியுள்ளார். தற்போதைய விவசாய அமைச்சரில் “கடும் எரிச்சலில்“ உள்ள ஜி.ரி.லிங்கநாதனும் இந்த விடயத்தில் துணை நிற்பதாக தெரிகிறது.

தற்போது வவுனியா மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளருக்கு மன்னாருக்கு இடமாற்றம் வழங்கப்படவிருப்பதாக முன்னரே தகவல் வெளியானது. எனினும், வவுனியாவை விட்டு வெளியில் செல்ல விருப்பமில்லாத அவர், அண்மையில் மாகாண விவசாய பணிப்பாளரை நிகழ்வொன்றிற்காக அழைத்திருந்தபோது,  தனது இடமாற்றத்தை நிறுத்துமாறு கோரியிருந்தார்.

இதையடுத்து முன்னைய விவசாய அமைச்சின் செயலாளருடன் பேசி இந்த இடமாற்றத்தை நிறுத்தி வைத்திருந்தார். விவசாய அமைச்சர் உத்தரவிட்டிருந்தபோதும், அந்த கடிதத்தை அனுப்பாமல் வைத்திருந்தார் விவசாய அமைச்சின் செயலாளர். இதையடுத்து, விவசாய அமைச்சின் செயலாளரை அழைத்த விவசாய அமைச்சர், கடுமையான எச்சரிக்கை செய்திருந்தார். வடக்கின் எந்த அமைச்சர்களும் தன்னுடன் அப்படி நடந்து கொண்டதில்லையென அப்போதைய விவசாய அமைச்சின் செயலாளர் தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பிய சம்பவமெல்லாம் நடந்தது. உடனடியாக கடிதத்தை அனுப்பி வைத்தார்.

இந்தநிலையில், வவுனியா பிரதி விவசாய பணிப்பாளர் தட்சணாமூர்த்தி யோகேஸ்வரனின் இடமாற்றத்தை நிறுத்தக்கோரி ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராசா, இ.இந்திரராசா ஆகியோர் விவசாய அமைச்சருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளனர்.

இவரது இடமாற்றத்தால் வவுனியா மாவட்ட விவசாயத்துறை அபிவிருத்திகள் பாதிக்கப்படுமென்ற வேடிக்கையான காரணம் அவர்களின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த கருத்து முட்டாள்தனமானதென்பதுடன், ஏனைய அரச உத்தியோகத்தர்களை அவமதிக்கும் விதத்திலானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விவசாய அமைச்சர் க.சிவநேசனிற்கும், ஜி.ரி.லிங்கநாதனிற்கும் இடையில் நீண்டகாலமாக போட்டித்தன்தையான்று நிலவுவதும், சிவநேசனின் அமைச்சர் நியமனத்தை தடுக்க லிங்கநாதன் பகிரங்க பிரயத்தனம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here