அனேக தாக்குதல்கள் தற்கொலை தாக்குதல்களே: 7 பேர் கைது!

நாட்டை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடந்த தாக்குதல்களில் அனேகமானவை தற்கொலை குண்டுதாரிகளாலேயே நடத்தப்பட்டுள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

தனது ருவிற்றர் பக்கத்தில் இந் தகவலை பதிவிட்டுள்ளார்.

அனேகமான தாக்குதல்கள் தற்கொலை குண்டுதாரிகளாலேயே நடத்தப்பட்டிருந்தது என்பதை தமிழ்பக்கம் காலையிலேயே குறிப்பிட்டிருந்தது. எனினும், அரசாங்கமோ பாதுகாப்புதுறை சார்ந்தவர்களோ இந்த தகவலை வெளியிடாமல் இருந்தார்கள். தற்பொழுதுதான் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, ஆறு தாக்குதல்கள் தற்கொலை தாக்குதல்கள் என்று புலன் விசாரணையாளர்கள் தரப்பிலிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here