வவுனியா கோவில்குளத்தில் இளைஞர்குழு அட்டகாசம்: மூவர் கைது!

வவுனியா கோவில்குளம் பகுதியில் இளைஞர் குழுவினால் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் அடித்து நெறுக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பம் பற்றி தெரியவருவதாவது,

வவுனியா கோவில்குளத்தில் தரித்து நின்ற கார் மற்றும் முச்சக்கரவண்டியை மதுபோதையில் வந்த இளைஞர்குழு அடித்து நொறுக்கியுள்ளது. இதன் காரணமாக கார் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் இளைஞர்குழுவிற்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைது செய்துள்ளதுடன் கார் மற்றும் முச்சக்கரவண்டியையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தமிழ்பக்கத்தின் அரசியல் செய்திகளை கந்தையா பாஸ்கரனிற்கு சொந்தமான ஜேவிபி, தமிழ்வின் இணையங்கள் அப்படியே கொப்பி பண்ணி வெளியிடுவதும் குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here