இன்ஸ்டகிராமில் வித்தியாசமான புகைப்படங்கள் பதிவிடும் ஆசை உயிரைப் பறித்தது!

உயரமான இடங்களில் இருந்து புகைப்படம் எடுத்து, இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிடுவதில் ஆர்வமுடைய இளம்யுவதியொருவர், 40 அடி உயர கோபுரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவின் போர்தம் பல்கலைகழகத்தின் இறுதியாண்டு மாணவியான பேஜ் மன்பிரிஸ் (22) என்ற யுவதியே உயிரிழந்தார்.

பல்கலைகழகத்திலிருந்து வெளியேறும் காலம் நெருங்கும் நிலையில், 40 அடியான கோபுரமொன்றில் ஏறி, புகைப்படம் பிடிக்க முயன்றுள்ளார். இதன்போது தவறி விழுந்து கழுத்து முறிவு ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார்.

உயரமான இடங்களில் ஏறி புகைப்படம் எடுப்பதில் பேஜ் மன்பிரிஸிற்கு ஆர்வமிருந்ததாக அவரது நண்பர்கள் குறிப்பிட்டனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here