ஸ்மித், வோர்னர் இல்லாத அணியா?: அவுஸ். உலகக்கிண்ண அணி அறிவிப்பு!

போட்டித் தடை விதிக்கப்பட்டிருந்த அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீபன் ஸ்மித் மற்றும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் ஆகியோரை உள்ளடக்கிய உலகக்கிண்ண அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் 15 பேர் கொண்ட வீரர்களின் பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உலகக்கிண்ண குழுவில் ஹாண்ட்ஸ்கொம் மற்றும் ஹஸில்வூட் ஆகியோருக்கு இடமளிக்கப்படவில்லை.

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் கேப்டவுனில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்காக டேவிட் வோர்னர் மற்றும் ஸ்டீபன் ஸ்மித் ஆகியோர் மீது ஐ.சி.சி போட்டித் தடை விதித்திருந்தது. அந்த தடை முடிந்ததும், இருவரும் தற்போது ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் 15 பேர் கொண்ட 2019 ஆண்டுக்கான உலக்கிண்ண குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய குழாம்-
ஏரோன் பின்ஞ் (கப்டன்), டேவிட் வோர்னர், ஸ்டீபன் ஸ்மித், உஷ்மன் கவாஜா, ஷோர்ன் மார்ஷ், கிளன் மெக்ஷ்வெல், மார்க்கஸ் ஸ்டெய்னிஸ், விக்கெட் காப்பாளராக அலக்ஸ் கேரி, பட் கெம்மின்ஸ், மிட்சல் ஸ்ராக், ஜெயி ரிச்சட்சன், நதன் குல்ட்லர் நில், ஜேசன் பிஹர்ன்டோர்ப், அடம் ஷம்பா, நதன் லின்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here