‘கர்ப்பமாக்கி ஏமாற்றிய காதலனுடன் சேர்த்து வையுங்கள்’: போலீசார் காலில் விழுந்து கதறிய இளம்பெண்!

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி, கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவான “மன்மதன்“ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திஇளம்பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்தவர் ரேணுகா. தாய், தந்தை இல்லாததால் ரேணுகா அவரது அக்கா வீட்டில் தங்கி அங்குள்ள காலணி தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவருக்கு அப்பகுதியை சேர்ந்த ஜானகி ராமனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் இரண்டு ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில், ரேணுகா கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து ஜானகிராமனிடம் தான் கர்ப்பமாக இருப்பதை கூறி திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் தன் வீட்டில் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார்கள் என்று கூறி, ஜானகி ராமன் திருமணத்திற்கு மறுத்துள்ளார்.

இதையடுத்து, ரேணுகா ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி, திருமணம் செய்வதாக கூறி தன்னை ஜானகி ராமன் ஏமாற்றிவிட்டதாக தன்னுடைய உறவினர்களுடன் சென்று புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தமிழரசி, இரண்டு மாத காலமாகியும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், நேரில் சென்று கேட்டதற்கு “வழக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டது. நீங்கள் நீதி மன்றத்தில் சென்று பார்த்துக்கொள்ளுங்கள்“ என்றும் கூறியதாக தெரிகிறது.

ஜானகிராமன்

இந்நிலையில், ஜானகிராமன் வீட்டு முன்பு தனது உறவினர்களுடன் சென்று, ரேணுகா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். தகவலறிந்து அங்கு வந்த போலீசாரிடம், ஜானகிராமனை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று காலில் விழுந்து கதறினார்.

தற்போது தலைமறைவாக உள்ள ஜானகிராமனை போலீசார் தேடி வருகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here