மோட்டார்சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

புதுவருட தினமான இன்று மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3.45 மணியளவில் பருத்தித்துறை 1ம் கட்டைக்கு அண்மையில் இடம்பெற்றது. மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததாலேயே விபத்து நேர்ந்தது.

பருத்தித்துறை 2ம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான மகாலிங்கம் புவிகரன் (38) என்பவரே உயிரிழந்தார்.

மந்திகைப் பகுதியிலிருந்து வீடு திரும்பியபோது, வேகக் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள்இ மதிலுக்கும் மின் கம்பத்துக்கும் இடையே புகுந்து விபத்துக்குள்ளாகியதில் அதனைச் செலுத்திச் சென்ற குடும்பத்தலைவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் கூறினர்.

விசாரணைகளின் பின்னர் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here