சாட்சியங்களை அழிக்க படகிற்கு தீ வைத்த ஈரான் போதைப்பொருள் கடத்தல்காரர்கள்!

100 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் வந்த ஈரானிய படகொன்றை இந்திய கடலோர காவல் படையினர் சுற்றிவளைத்த நிலையில், அந்த படகிலிருந்தவர்ளால் படகு தீமூட்டப்பட்டுள்ளது.

சாட்சியங்களை அழிப்பதற்காகவே கடத்தல்க்காரர்கள் படகிற்கு தீ வைத்தனர்.

எனினும், படகிலிருந்த 100 கிலோ ஹெரோயின் போதைப்பொருளை கடலோர காவல்ப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்த படகை குறிவைத்து சுமார் 2 வாரங்களாக இந்திய கடலோர காவல்படையினர் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here