வட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டகிராம் திடீர் முடக்கம்!

பல நாடுகளில் வட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டகிராம் சேவை திடீரென முடங்கியதால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

உலகின் முன்னணி சமூகவலைதளங்களாக உள்ள பேஸ்புக், வட்ஸ் அப், இன்ஸ்டகிராம் போன்றவை இன்று மாலை திடீரென செயலிழந்தன. உலகின் பல நாடுகளிலும் ஒரே நேரத்தில் செயலிழப்பு ஏற்பட்டது.

எனினும், மொபைலில் பயன்படுத்தப்படும் வட்ஸ்அப், இன்ஸ்டகிராம், பேஸ்புக் சேவைகளில் பாதிப்பு ஏற்படவில்லை.

கணினியில் இந்த சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது மட்டுமே முடங்கின. இதைத்தொடர்ந்து, ருவிட்டர் சமூக வலைதளத்தில் #FacebookDown என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டானது. சில மணிநேரத்துக்கு பிறகே நிலைமை சீரானது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here