மாவையின் மனமாற்றத்தால் துரைராசசிங்கத்தின் தலை தப்பியது!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளராக கி.துரைராசசிங்கத்தை மீண்டும் நியமிக்க வேண்டாமென, கிழக்கு முக்கியஸ்தர்கள் கூட்டாக வலியுறுத்தியதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். இதன் பிந்தைய நிலைமையாக, கி.துரைராசசிங்கத்தையே மீளவும் செயலாளராக நியமிக்க கட்சி முடிவு செய்துள்ளது.

இதன்படி, அடுத்த தேசிய மாநாட்டில் கட்சியின் தலைவர், செயலாளர் பதவிகளில் மாற்றம் நிகழாது.

செயலாளர் தொடர்பாக நிறைய முறைப்பாடுகள், விமர்சனங்கள் இருந்தாலும், அந்த பதவியில் மாற்றம் செய்வதில்லையென கட்சி முடிவெடுத்ததற்கு பின்னால் வேறொரு காரணம் உள்ளது.

கட்சியின் தலைவராக மாவை சேனாதிராசாவே மீளவும் நியமிக்கப்படவுள்ளார். மீண்டும் தலைவராகுவதற்கு மாவை மிக ஆர்வமாக உள்ளார். அதனால், தலைமையில் மாற்றம் நிகழ வாய்ப்பில்லை.

கட்சியின் வரலாற்றில் இதுவரை தலைவர், செயலாளர்கள் நியமிக்கப்படும் போது, ஒரே தடவையிலேயே இரண்டு பேரையும் மாற்றம் செய்வதே வழக்கமாக இருந்தது. மாவை தலைவராக தொடர ஆர்வப்படும் நிலையில், அந்த வழக்கத்திற்கு மாறாக, செயலாளரை மட்டும் மாற்றம் செய்ய கட்சி விரும்பவில்லை. அப்படி செய்வது, கிழக்கில் விமர்சனங்களை ஏற்படுத்துமென கட்சி கருதுகிறது.

இதனால், துரைராசசிங்கமே கட்சியின் செயலாளராக நீடிப்பார் என கட்சியின் உயர்மட்டத்தில் முடிவாகியுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here