அவுஸ்திரேலிய நைட் கிளப்பிற்கு வெளியே துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி!

அஸ்திரேலியாவில் இரவு விடுதி வெளியே நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பிரஹ்ரான் மாவட்டத்தில் உள்ள லிட்டில் சப்பல் வீதி அருகே அந்துள்ள லவ் மெஷின் என்ற இரவு விடுதிக்கு வெளியே அதிகாலை 3.20 மணியளவில் திடீரென துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் நால்வர் காயமடைந்தனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அரோன் காலித் ஒஸ்மானி (37) என்பவர் உயிரிழந்தார்.

அரோன் காலித் ஒஸ்மானி

அவுஸ்திரேலியாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது மிக அரிது. கடந்த 1996ம் ஆண்டு தாஸ்மானியாவில் 35 பேர் சுட்டு கொல்லப்பட்ட பின்னர் கடுமையான துப்பாக்கி சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதன்பின் கடந்த வருடம் மேற்கு அவுஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 7 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் சுட்டவரும் தற்கொலை செய்து கொண்டார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here