விகாரி வருட சுப நேரங்கள்!

வருடப்பிறப்பு மலரும் மங்களகரமான விகாரி என்ற புதிய ஆண்டு (14.04.2019) சித்திரை 1 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நாடி 17 விநாடி 49 பூர்வபக்க தசமி திதியில் ஆயிலிய நட்சத்திரத்தில் இரண்டாம் பாதத்தில் கடக லக்கினத்தில் விகாரி வருடம் பிறக்கிறது.

விஷூ புண்ணிய காலம்

14 ஆம் திகதி முற்பகல் 9.12 அன்று பிற்பகல் 5.12 வரை விஷூ புண்ணிய காலமாகும்.

மருத்து நீர், ஆடை

இந்நேரத்தில் மருத்து நீர் வைத்து நீராடி வௌ்ளை நிறமுள்ள பட்டாடை ஆயினும் வௌ்ளை சிவப்புக்கரை அமைந்த புதிய பட்டாடை ஆயினும் அணிய வேண்டும்.

கைவிசேஷம்

14.04.2019 இரவு 10.31 – 11.15 வரை
17.04.2019 காலை 10.16 – 11.51 வரை
18.04.2019 காலை 9.47 – 11.46 வரை

தமிழ்பக்க வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here