வலி வடக்கு காணி அபகரிப்பு ஆவணங்கள் பிரான்ஸ் நாடாளுமன்ற குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது!

யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகளாகின்ற போதும், வலி வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் அகதி வாழ்க்கை முடிவுக்கு வரவில்லையென்று குறிப்பிட்டு, வலி வடக்கு காணி அபகரிப்பு தொடர்பான ஆவணங்களை பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் தமிழர் விவகாரங்களுக்கான குழுவின் தலைவரும், அந்த நாட்டு எம்.பியுமான மரியா ஜோர்ஜ் பவ்பெட்டிடம் கையளித்துள்ளார் வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர் ச.சஜீவன்.

பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் தமிழர் விவகாரங்களுக்கான குழுவின் ஏற்பாட்டில், போர் நிறைவுக்கு வந்து பத்தாண்டுகளில் ஈழத்தமிழர்களின் நிலை என்ற தொனிப்பொருளிலான கருத்தரங்கு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள சென்ற சமயத்திலேயே, இந்த ஆவணங்களை சஜீவன் கையளித்தார.

மரியா ஜோர்ஜ் பவ்பெட்டுடான சந்திப்பில், வடக்கு கிழக்கில் நடக்கும் நில அபகரிப்பு, பௌத்த மயமாக்கல் பற்றியும் விபரமாக குறிப்பிட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here