இந்த வார ராசி பலன்கள் (14.4.2019- 20.4.2019)

ராகு, குரு, சுக்கிரன், சந்திரனால் அதிக நன்மை உண்டாகும். சரியான திட்டமிடுதல் மூலம் செயல்களில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்திற்கான பணத்தேவையை பூர்த்தி செய்வீர்கள். .அறிமுகமற்றவர்களுக்கு வீடு, வாகனத்தில் இடம் தர வேண்டாம். பிள்ளைகள், பெற்றோரின் அறிவுரையை பின்பற்றி நடப்பர். ஓய்வும், தெய்வ வழிபாடும் மனதில் அமைதியை தரும். மனைவியின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டி குறைந்து வளர்ச்சி ஏற்படும். பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு நன்மதிப்பும், சலுகையும் பெறுவர். பெண்கள் பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் முன்னேற மாற்று வழிகளை யோசிப்பர்.

பரிகாரம் : சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

புதன், குரு, சுக்கிரன் அதிர்ஷ்ட பலன்களை தருவர். பணியாளர்கள் சூழ்நிலை உணர்ந்து பணியாற்றுவர். மனதில் உறுதியும், நம்பிக்கையும் ஏற்படும். விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவர். வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். பிள்ளைகள், பெற்றோரின் வழிகாட்டுதலின்படி படிப்பு, வேலையில் முன்னேற்றம் காண்பர். உடல் ஆரோக்கியம் மேம்படும். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும். மனைவியின் சொல்லும், செயலும் குடும்ப நலன் சிறக்க உதவும். புதியவர்களின் ஆதரவில் தொழில், வியாபாரம் செழிக்கும். பணியாளர்கள் இதுவரை அறியாத தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வர். பெண்கள் தாய் வீட்டு உதவியை கேட்டு பெறுவர். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற நண்பர் உதவுவார்.

பரிகாரம் : துர்க்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

சூரியன், புதன், குரு, சந்திரனால் நற்பலன் ஏற்படும். புதிய நிகழ்வுகள் மூலம் அனுபவபாடம் கற்பீர்கள். நண்பர்களின் எண்ணம் உணர்ந்து பேசுவது நல்லது. வாகனப்பயணம் இனிய அனுபவம் தரும். பிள்ளைகளின் குணம் அறிந்து இதமாக நல்வழி நடத்துவீர்கள். பூர்வ புண்ணிய நற்பலன் நன்மைகளை உருவாக்கும். பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவி வழி உறவினர்களின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சியும், பணவரவும் கூடும். பணியாளர்கள் நிர்வாகத்திடம் நற்பெயர் பெறுவர். பெண்கள் குடும்ப நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் படிப்பில் சிறந்து பரிசு, பாராட்டு பெறுவர்.

பரிகாரம்: குரு வழிபாடு மங்கள வாழ்வு தரும்.

பெரும்பான்மை கிரகங்கள் அளப்பரிய சுப பலன் வழங்குகின்றன. செயலில் நேர்த்தியும், அழகும் வெளிப்படும். பொதுநலப்பணியிலும் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பிள்ளைகள், பெற்றோர் சொல் கேட்டு நடப்பர். நண்பருடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். எதிர்ப்பு விலகி மனதில் புதிய நம்பிக்கை ஏற்படும். மனைவியின் ஜாதக யோகபலன் முன்னேற்றத்தை தரும். அதிக மூலதனத்தில் தொழில், வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும் .பெண்கள் தாய் வீட்டுக்கு இயன்ற அளவில் உதவுவர். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம்: சாஸ்தா வழிபாடு இடர் நீக்கும்.

புதன், குரு, சுக்கிரன், ராகு அனுகூலமாக உள்ளனர். இனிய எண்ணங்கள் மனதில் நிறைந்திருக்கும். பணவரவுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும். உடன்பிறந்தவரின் பாச மழையில் நனைவீர்கள். பாதுகாப்புடன் வெளியூர் பயணம் மேற்கொள்வது நல்லது. பிள்ளைகள், பெற்றோரிடம் இணக்கமாக நடந்து கொள்வர். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீhகள். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழித்து கணிசமான பண வரவு உண்டு. பணியாளர்கள் குறித்த நேரத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்கள் பிரார்த்தனை நிறைவேறி தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் பரிசு, பாராட்டு பெறுவர்.

பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு வெற்றியளிக்கும்.

சந்திரன் மட்டுமே ஓரளவு நற்பலன் வழங்குவார். பேச்சு செயலில் நிதானம் அவசியம். நண்பரின் ஆலோசனை மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தும். வீடு, வாகனத்தில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். பிள்ளைகள் சில விஷயங்களில் பிடிவாதம் செய்வர். நோய் தொந்தரவுக்கு சிகிச்சையும், சீரான ஓய்வும் அவசியம். அதிக நிபந்தனையுடன் பணக்கடன் பெற வேண்டாம். மனைவியிடம் உங்கள் உறவினர் குடும்ப விவகாரம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும், பணவரவும் சுமாராக இருக்கும். பணியாளர்கள் தங்கள் கடமையை உணர்ந்து பணியாற்ற வேண்டும். பெண்கள் பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்க வேண்டாம். மாணவர்கள பாதுகாப்பற்ற இடங்களில் செல்ல வேண்டாம்.

பரிகாரம்: பைரவர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

புதன், கேது, சனி, சந்திரன் ராஜயோகபலன் தருவர். மனதில் ஞான சிந்தனை வளரும். செயல்களில் வெற்றி கூடும். குடும்பத்தேவை பூர்த்தியாகும். தாய்வழி உறவினர் அன்பு பாராட்டுவர். பிள்ளைகள் படிப்பு, வேலையில் முன்னேற்றம் காண்பர். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனைவியின் ஆர்வமிகு செயலை குறை சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரம் செழித்து நிலுவைப் பணம் வசூலாகும். பணியாளர்கள் தங்கள் கடமையை உணர்ந்து பணிபுரிவர். பெண்கள் தாய் வீட்டு உதவி கிடைத்து மனம் மகிழ்வர். மாணவர்கள் தேவையற்ற விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.

சூரியன், சுக்கிரன், சனீஸ்வரர், சந்திரன் அளப்பரிய நற்பலன் வழங்குவர். மனமும், உடலும் புத்துணர்வு பெறும். பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். தாயின், அன்பு பாசம் நெகிழ்ச்சி தரும். பிள்ளைகள் உங்கள் வழிகாட்டுதல்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வர். விவகாரங்களில் சமரச தீர்வு கிடைக்கும். மனைவி வழி உறவினர் உங்களின் நல்லகுணத்தை பாராட்டுவர். வெளியூர் பயணத்தால் நன்மை அடைவீர்கள். தொழில், வியாபாரம் புதியவர்களின் ஆதரவில் செழித்து வளரும். பணியாளர்கள் கூடுதல் பணியை ஏற்கலாம். பெண்கள் குடும்ப ஒற்றுமையை பேணிக்காத்திடுவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து, கலைகளும் பயில்வர்.

பரிகாரம்: பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.

செவ்வாய், புதன், சுக்கிரன், சந்திரன் தாராள நற்பலன் தருவர். நண்பரிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். தினசரி வாழ்க்கை எளிதாக இருக்கும். தாய்வழி உறவினர்கள் மீது அன்பு காட்டுவீர்கள். புதிய வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. பிள்ளைகளின் திறமைக்கு ஏற்றவாறு முன்னேற்ற பாதையை ஏற்படுத்தி தருவீர்கள். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவி விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகி, பணவரவு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பெண்கள், கணவரின் அன்பு பாசத்தில் சந்தோஷ வாழ்வு பெறுவர். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

சந்திராஷ்டமம்: 14.4.19 காலை 6:00 மணி – இரவு 3:08 மணி
பரிகாரம்: அம்பிகை வழிபாடு மங்கள வாழ்வு தரும்.

ராகு, சுக்கிரன், சந்திரனால் நற்பலன் வந்து சேரும். தாமதமான காரியம், புதிய முயற்சியால் நிறைவேறும். சமூகத்தில் அந்தஸ்து கூடும். தம்பி, தங்கை உங்கள் சொல் கேட்டு நடப்பர். கடின உழைப்பினால் செல்வவளம் சேரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். வாகனத்தின் பயன்பாடு அதிகரிக்கும். பிள்ளைகள் படிப்பு, வேலையில் முன்னேறுவர். உடல் ஆரோக்கியம் பலம்பெறும். மனைவியின் ஆர்வமிகு செயல் குளறுபடியாகலாம். தொழில், வியாபாரம் செழித்து பணம் சேமிப்பு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்க உயர்அதிகாரி உதவுவார். பெண்கள் குடும்ப நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் படிப்பில் முன்னேற அதிக பயிற்சி தேவைப்படும்.

சந்திராஷ்டமம்: 14.4.19 இரவு 3:09 மணி – 16.4.19 இரவு 5:31 மணி
பரிகாரம்: சிவன் வழிபாடு சகல நன்மை தரும்.

பெரும்பான்மை கிரகங்கள் அதிர்ஷ்டகரமான பலன் வழங்குகின்றன. செயல்களில் நல்ல நோக்கம் நிறைந்திருக்கும். உடன்பிறந்தவர்களுக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். பூர்வ சொத்து மூலம் பணவரவு உண்டு. பிள்ளைகள், பெற்றோரிடம் அன்புடன் நடந்து கொள்வர். எதிரிகள் விலகுவர். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலைத்திருக்கும். அரசு சார்ந்த சில நன்மை எளிய அணுகுமுறையால் கிடைக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவி இணக்கமுடன் நடந்து கொள்வார். தொழிலில் லாப விகிதம் அதிகரித்து, வளர்ச்சி இலக்கை அடைவீர்கள். பணியாளர்கள் பணியிடச்சூழல் உணர்ந்து பணிபுரிவது அவசியம். பெண்கள், குடும்ப உறுப்பினர்களின் அன்பை பெறுவர். மாணவர்கள் படிப்புடன் பொது அறிவிலும் மேம்படுவர்.

சந்திராஷ்டமம்: 17.4.19 அதிகாலை 5:32 மணி 19.4.19 காலை 8:41 மணி
பரிகாரம்: முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.

செவ்வாய், சுக்கிரன், சந்திரன் ஆதாய பலன்களை தருவர். இனிய நினைவுகளில் திளைப்பீர்கள். மனதில் ஊக்கமும், செயலில் புதிய ஆற்றலும் வெளிப்படும். பணிகளை திட்டமிட்டபடி நிறைவேற்றுவீர்கள். வீடு, வாகனத்தில் உரிய பாதுகாப்பு வேண்டும். பிள்ளைகளின் தகுதி, திறமை வளர நண்பர்களின் உதவி கிடைக்கும். நோய் தொந்தரவு விலகி உடல் ஆரோக்கியம் மேம்படும். பணப்பரிவர்த்தனை அளவுடன் இருக்கும். மனைவியின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். புதிய அணுகுமுறையால் தொழில், வியாபாரம் செழித்து வளரும். பணியாளர்களுக்கு திருப்திகர அளவில் பணவரவு கிடைக்கும். பெண்கள் தாய் வீட்டு பெருமை பேசுவர். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் வேண்டும்.

சந்திராஷ்டமம்: 19.4.19 காலை 8:42 மணி 20.4.19 அன்று நாள் முழுவதும்.
பரிகாரம்: விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here