15ம் திகதி அரசியல் மாற்றம் நடக்குமா?… இந்த இரண்டில் எந்த முடிவை மைத்திரி எடுப்பார்?

நாளை மறுநாள்- 15ம் திகதி- இலங்கை அரசியலில் பரபரப்பான சம்பவமொன்று நிகழுமென்ற எதிர்பார்ப்பு அரசியலரங்கில் எகிறிக் கொண்டு செல்கிறது. எல்லா அரசியல் தரப்பிலும் இது குறித்த பரபரப்பு இருப்பதை அவதானிக்க முடிகிறது.

15ம் திகதி எப்படியான அரசியல் மாற்றம் நிகழுமென்ற பல்வேறு ஊகங்கள் பரவி வருகின்றன. எனினும், எதையும் உறுதி செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது.

முன்னர் ஒருமுறை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிடும்போது, “போருக்கு செல்லும்போது தமது ஆயுதங்களை எதிரிகளிற்கு காண்பித்துக் கொண்டு செல்லமாட்டார்கள்“ என. இம்முறை ஜனாதிபதி தரப்பிலிருந்தே, பரபரப்பான நகர்வு நடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இம்முறை தனது ஆயுதங்களை ஜனாதிபதி மிக இரகசியமாக வைத்திருப்பதால், அவரது நகர்வுகள் குறித்த தகவல்கள் உறுதியாக கசியவில்லை. எனினும், கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் எப்படியான சாத்தியங்கள் இருக்குமென்பதை பட்டியல்படுத்தியுள்ளோம்.

ஆளில்லாத கிரவுண்டில் அடித்தாடும் ஐடியா!

ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்தும் யோசனை ஜனாதிபதிக்கு இருப்பதாக தெரிகிறது. ஐ.தே.கவுடன் இணைந்து பொது வேட்பாளராகவோ, சு.க- பொதுஜன பெரமுன கூட்டின் ஜனாதிபதி வேட்பாளராகவோ களமிறங்க ஜனாதிபதிக்கு தற்போது வாய்ப்புக்கள் இல்லை.

பொதுஜன பெரமுன தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் ராஜபக்ச குடும்பத்திற்குள் குழப்பம் நிலவுகிறது. கோத்தபாயவை களமிறக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியிருந்தாலும், கோத்தபாய இன்னும் அதற்கு சில தயார்படுத்தல்களை முடிக்கவில்லை. குறிப்பாக அமெரிக்க குடியுரிமையை இன்னும் நீக்கிக் கொள்ளவில்லை. அதற்கு இன்னும் சில காலமாகலாம்.

ஐ.தே.க முகாமிற்குள்ளும் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த குழப்பம் உள்ளது. ரணிலா, கருவா, சஜித்தா என்ற குழப்பம் உள்ளது. இந்த நிலைமையில் முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை அறிவித்து, எதிர்தரப்பில் யாரும் தயாராகாத சமயத்தில், ஜனாதிபதி தேர்தலை அறிவித்து, பலமான எதிராளிகள் இல்லாத வாய்ப்பை பயன்படுத்தி மீண்டும் ஜனாதிபதியாகும் ஐடியா இருப்பதாக வலுவான அப்பிராயங்கள் உள்ளன.

கழுவி ஊற்றும் ஐடியா!

மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் ஐ.தே.கவின் பங்கு என்னவென்பதில் ஒரு இரகசியமும் கிடையாது. பிணைமுறி அறிக்கையை முழுமையாக அம்பலப்படுத்தி ரணிலை அரசியல்ரீதியாக பலவீனப்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட கஞ்சிப்பான இம்ரானிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை, டுபாயில் மதுஷ் மீதான விசாரணை அறிக்கைகளின் அடிப்படையில், அரசின் முக்கிய புள்ளிகள் பலரது தலை சிக்கியுள்ளதாக தெரிகிறது. அரசின் மிக உயர்மட்ட புள்ளிகள் பலர், இந்த குழுவுடன் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைத்துள்ளதால், அதையும் அம்பலப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here