எச்சரிக்கை: இளம் யுவதிகளை கொண்ட கொள்ளைக்கும்பல் மலையகத்திற்குள் நுழைந்தது!

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நகரில் ஏற்படும் சன நெரிசலை பயன்படுத்தி பொதுமக்களின் பணம், உடைமைகளை கொள்ளையிடும் நோக்கத்துடன் கொழும்பு, சிலாபம் பகுதிகளைச் சேர்ந்த இளம் யுவதிகள் அங்கிய 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று கம்பளை நகருக்குள் நுழைந்துள்ளதாக பொலிசார் எச்சரித்துள்ளனர்.

அத்துடன் நகருக்கு வரும் பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த கொள்ளை கும்பலை சேர்ந்த இரண்டு யுவதிகள் அடங்கிய மூவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கைதானவர்களில் 58 வயதான பெண் ஒருவரும் அடங்குகிறார்.

இந்த யுவதிகள் இருவர் அல்லது மூவர் கொண்ட குழுக்களாக பிரிந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்தமை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை நேற்று முன்தினம் பகல் வேளையில் கம்பளை கம்பளவெல கிராமத்தைச் சேர்ந்த நபரொருவர் தனது மனைவி, பிள்ளைகளுடன் கம்பளை நகரில் அமைந்துள்ள புடவைக் கடை ஒன்றுக்கு சென்று, உடைகளை தேர்வு செய்து கொண்டிருந்த சமயம், அவரிடம் இருந்த ஒரு இலட்சத்து 24 ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கம்பளை பொலிசாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, அங்கிருந்த கண்காணிப்பு கமராக்களை பரிசோதனை செய்து பார்த்ததில், உடையை தேர்வு செய்து கொண்டிருந்த நபருக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒரு தம்பதியினர் பணப்பையை திருடுவது பதிவாகியிருந்தது. அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here