கல்முனையில் விபத்தால் மின் துண்டிப்பு!

கல்முனை பாண்டிருப்பில் நேற்று அதிகாலை கெப் ரக வாகனம் ஒன்று மின் கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளானது. இதில் ஒருவர் காயமடைந்தார்.

நேற்று அதிகாலை 2.30 மணியளவில் கல்முனை குடியிலிருந்து மட்டக்களப்பை நோக்கி சென்ற கெப் ரக வாகனமொன்று, பாண்டிருப்பு சந்தைக்கு அருகில் உள்ள திரையரங்கிற்கு அருகில் உள்ள இரண்டு மின்கம்பங்களை மோதி விபத்திற்குள்ளானது. இதில் ஒரு மின்கம்பம் முறிந்து வாகனத்தின் மீது விழுந்த நிலையில், சுமார் 50 மீற்றர்கள் வாகனம் பயணித்தது.

இதில் சாரதி காயமடைந்தார்.

இந்த விபத்தால் கல்முனை பகுதியின் சில இடங்களில் நேற்று நீண்டநேரமாக மின்சாரம் துண்டிகக்ப்பட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here