தொடரும் மட்டு வைத்தியசாலை மரணங்கள்: பிரசவத்தில் தாயும், சேயும் பலி!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுபவர்கள் மரணிக்கும் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகிறது, இதை தடுக்க நடவடிக்கையெடுக்க வேண்டுமென மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றிய சில நாட்களிலேயே மீண்டும் தாயும் சேயும் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிசேரியன் முறையில் குழந்தையை பிரசவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் போதே தாயும் சேயும் உயிரிழந்துள்ளனர்.

மகிழடித்தீவை சேர்ந்த யசோதா என்ற பெண்ணும், அவரது வயிற்றிலிருந்த குழந்தையுமே உயிரிழந்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here