அட்டன் பன்மூர் ஓம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம்

அட்டன் மாநகருக்கு அருகில் அமைந்துள்ள பன்மூர் ஊரில் எழுந்தருளி இருக்கும் ஓம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேக திருகுட முழுக்கு பெருஞ்சாந்தி பெருவிழா நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

06.04.2019 சனிக்கிழமையுடன் ஆரம்பித்த கிரியாரம்பத்தை தொடர்ந்து 08.04.2019 மற்றும் 09.04.2019 ஆகிய இரு தினங்களும் எண்ணெய் காப்பு நடைபெற்றதுடன் 10.04.2019 அன்று காலை கங்கை கரையில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தின் மூலம் மஹா கும்பாபிஷேக திருகுடமுழுக்கு பெருச்சாந்தி  பெருவிழா நடைபெற்றது.

கிரியா கலாபமணி கிரியாகிரம ஜோதி பிரம்மஸ்ரீ சு. திவாகரக் குருக்களால் செய்து வைக்கப்பட்ட இந்த மஹா கும்பாபிஷேகத்திற்கு மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்ன அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here