“பிரபு,சத்யராஜ் உன்னத் தடவுனதெல்லாம் மறந்துபோச்சா”: கஸ்தூரியில் கடுப்பான லதா!

“என்னய்யா இது.. ‘பல்லாண்டு வாழ்க’ படத்துல வாத்தியாரு, லதாவை தடவுனதைவிட அதிகமா தடவுறாங்க. #CSK 81-3 (14 Overs)” என்று அண்மையில் ட்விட் போட்ட கஸ்தூரிக்கு, ’இவரை நடிகர்கள் தடவுனதையே போட்டிருக்கலாமே’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகை லதா.

அண்மையில் சென்னை சுப்பர் கிங்ஸ்- கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளிற்கிடையிலான போட்டியில் குறைந்த இலக்கை துரத்திய சென்னை, தடவி தடவி ஆடி வென்றது.

சென்னையின் தடவலை பார்த்து கடுப்பாகிய கஸ்தூரி மேற்படி ருவிட்டை போட்டார். அது இப்பொழுது பெரும் சர்ச்சையாகி விட்டது.

அந்த ட்விட் குறித்து நடிகை லதா கோபமாப பேசியிருக்கிறார்.

“நான் 50 வருஷமா நடிச்சிக்கிட்டிருக்கேன். இப்போவரைக்கும் எனக்குன்னு ஒரு மரியாதையை தக்க வைச்சுக்கிட்டிருக்கேன். ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரை. தெய்வமா மதிக்கிற கோடானுகோடி ரசிகர்கள் தமிழ்நாட்டுல இருக்காங்க. அவங்களையெல்லாம் ஒட்டு மொத்தமா மன வருத்தப்படுற மாதிரி இப்படியெல்லாம் எழுதலாமா?

கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் எந்தப் படத்துலேயும் விரசமா நடிக்கலையே? அவங்களுக்கு கருத்துச் சொல்ல ஒரு விஷயம் தேவைப்பட்டுச்சுன்னா அவங்க நடிச்ச படத்துல இருந்தே சொல்லியிருக்கலாமே? எதுக்கு நானும், ‘மக்கள் திலகமும்’ நடிச்ச படத்தைச் சொல்லணும்?“ என்றார்.

இதேவேளை, கஸ்தூரியின் மேற்படி ருவிட்டின் கீழ், பலர் கடுமையாக திட்டியுள்ளனர். கஸ்தூரி நடித்த பட காட்சிகளை பதிவிட்டு, “மொதல்ல நீ யோக்கியமா..? இதெல்லாம் என்ன..? தடவுறது இல்லையா..? பிரபு,சத்யராஜ் உன்னத் தடவுனதெல்லாம் மறந்துபோச்சா” என கேள்வியெழுப்பியுள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here