பிகினி படத்தால் உலகத்தின் வாயை அடைக்க வைத்த நடிகை!

பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் – மலைக்கா அரோரா இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

சமீபத்தில் மாலைதீவுக்கு ஒரு ஜாலி டிரிப் போன மலைக்கா, சமூக வலைதளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை பதிவேற்றம் செய்தார். அவ்வளவுதான், கலாச்சார காவலர்களுக்கு மூக்கு வியர்த்து விட்டது. ஆளாளுக்கு அறிவுரையை அள்ளித் தெளிக்க, அதை கண்டுக்காத மலைக்கா, பிகினி உடையில் ஒரு போட்டோவை போட்டு பதிலளித்துள்ளார்.

“மகிழ்ச்சியுடன் இருப்பது அவரவர் விருப்பம். நான் மகிழ்ச்சியோடு இருக்கவே விரும்புகிறேன். அதனால் உங்கள் அறிவுரைகளையும், வன்மத்தையும் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்“ என பதிவிட்டுள்ளார்.

மாலைதீவுக்கு அர்ஜுன் கபூர் உடன் பார்ட்டி கொண்டாடதான் மலைக்கா சென்றிருக்கிறார் என கூறப்பட்டது. மும்பை திரும்பிய மலைக்கா உடன் அர்ஜுன் கபூரும் ஏர்போர்டில் இருந்திருக்கிறார்.

இந்த ஜோடிக்கு வரும் ஏப்ரல் 19 ம் திகதி திருமணம் என பாலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here