சசிகலா பற்றி மற்றுமொரு படம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி முதன் முறையாக கன்னடத்தில் அம்மா என்ற பெயரில் ஒரு படம் தயாரானது. அந்தப் படத்தை எதிர்த்து கர்நாடக மாநில அதிமுகவினர் வழக்கு தொடர்ந்திருப்பதால் அந்தப் படம் வெளிவரவில்லை.

தற்போது ஐயர்ன்லேடி என்ற பெயரில் பிரியதர்ஷினி என்ற பெண் இயக்குனர் இயக்கி வருகிறார். இதில் நித்யா மேனன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். இயக்குனர் கவுதம் மேனன் புரட்சித் தலைவி என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை டெலி சீரிசாக இயக்கி வருகிறார். இதில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணனும், சசிகலாவாக விஜி சந்திரசேகரும் நடித்து வருகிறார்கள். இயக்குனர் ஏ.எல்.விஜய் தலைவி என்ற பெயரில் இயக்குகிறார். இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரணவத் நடிக்கிறார்.

இந்த நிலையில் சசிகலாவின் வாழ்க்கையை படமாக்கப்போவதாக ராம்கோபால் வர்மா அறிவித்து அதன் பர்ஸ்ட்லுக் போஸ்டரையும் வெளியிட்டார். தற்போது சசிகலா பற்றி இன்னொரு படம் தயாராகி வரும் தகவல் வெளியாகி உள்ளது. சசி லலிதா என்ற தலைப்பில் இந்த படம் தயாராகிறது. இதனை ஜெயம் மூவீஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. கே.ஜகதீஸ்வர ரெட்டி என்பவர் இயக்குகிறார். இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. இதில் சசிகலா, ஜெயலலிதா முகங்கள் இணைந்த ஒரு முகம் வெளியிடப்பட்டிருக்கிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here