பாண்டிங் வந்தார் வென்றார்: ‘மெய்சிலிர்த்த’ ஷ்ரேயஸ் ஐயர்

டெல்லி டேர் டெவில்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் நிகழ்த்திய உரை, வெற்றி பற்றிய அவரது வலியுறுத்தல் மெய்சிலிர்க்க வைத்ததாக ஷ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் ஆக்ரோஷமான, பாசிட்டிவான அணுகுமுறைக்கு பெயர்பெற்ற ரிக்கி பாண்டிங் அணிக்கு உத்வேகமூட்டும் பேச்சு ஒன்றை வழங்கினார்.

இது குறித்து ஷ்ரேயஸ் ஐயர் கூறும்போது, “பாண்டிங் ஆக்ரோஷமானவர், எப்போதும் பாசிட்டிவ் மனநிலையில் இருப்பவர். முதல் நாளில் அவர் வழங்கிய உரை எங்களை மெய்சிலிர்க்க வைத்தது. அவரது மன அமைப்பே வெற்றி என்பதாகவே உள்ளது.. அனைவரும் வந்தனர் நாங்கள் நடைமுறை, செயல்முறை என்று விவாதித்துக் கொண்டிருந்தோம். பாண்டிங் வந்தார், ஒரேயொரு அணுகுமுறைதான் அவரிடம் காணப்பட்டது, அது வெற்றி என்பதே, அதைத்தான் விரிவாகப் பேசினார்.

எங்களை எங்களின் சொந்த ஆட்டத்தை ஆடுமாறும், திறமையையும் உத்தியையும் மாற்றத் தேவையில்லை என்றார். இளம் வீரர்களை தயார் படுத்த அவருக்கென்று ஒரு பாணி இருக்கிறது. அவர் வந்து 3 அல்லது 4 நாட்கள்தான் ஆகிறது ஆனால் அதற்குள் ஏகப்பட்டது கற்றுக் கொண்டோம்.

திராவிட் அமைதியானவர் அணுகுமுறையில் அலட்டிக் கொள்ளாதவர் முடிவை விட அதற்கான நடைமுறையை வலியுறுத்துபவர். திராவிடுக்கு நேர் எதிரானவர் பாண்டிங், ஆனால் அடிப்படையில் இருவர் மன அமைப்பும் ஒன்றே. இருவருமே அவர்களது வழிமுறைகளில் சம அளவில் சிறந்து விளங்குபவர்கள்” என்றார் ஷ்ரேயஸ் ஐயர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here