துரைராசசிங்கத்தின் வண்டவாளம்… வீதி புனரமைப்பை இரகசியமாக தடுத்தார்!

மட்டக்களப்பில் தமிழ் பிரதேசத்தில் தமிழ்பிரதேசத்தில் பதினைந்து கிலோமீற்றர் நீளமான வீதியொன்றை மாகாண முதலமைச்சராக இருந்த ஹாபிஸ் அஹமட் இந்த காரியத்தை செய்துள்ளார். முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் இதை மௌனமாக அங்கீகரித்துள்ளனர்.

மண்முனை பாலம் கடந்த மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மண்முனை தொடக்கம் அம்பிளாந்துறை வரையான வீதி அபிவிருத்தி செய்யப்படவிருந்தது.

இந்த வீதி மாகாணசபைக்குட்பட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்குட்பட்டதாக இந்த வீதியிருந்தது. பதினைந்து கிலோமீற்றர் நீளமான இந்த வீதியை காபெற் இட்டு நவீனமுறையில் புனரமைக்கும் வசதி அந்த திணைக்களத்திடம் இல்லையென்பதால், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அந்த ஒப்பந்தத்தை செய்ய இருந்தது.

முன்னாள் முதலமைச்சர் மஜித் அதற்கு ஒப்புதல் வழங்கியிருந்தார். எனினும், இதற்குள் 2015 ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. இதையடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் ஹாபிஸ் நஸீர் அஹமட் முதலமைச்சரானார்.

மாகாண நிர்வாகத்திற்குள் மத்திய அரசு தலையிட முடியாதென காரணம் கூறி, இந்த வீதி அபிவிருத்தி திட்டத்தை அவர் நிராகரித்தார். அவர் நிராகரித்த சமயத்தில் தண்டாயுதபாணி, துரைராஜசிங்கம் என இரண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைச்சர்கள், மாகாணசபையில் இருந்தனர்.

எனினும், கடந்த மாகாணசபை ஆட்சி முடியும்வரை அந்த வீதி புனரமைக்கப்படவில்லை. இனியும் புனரமைக்கப்படும் வாய்ப்பு தெரியவில்லை.

ஹாபிஸ் நஸீர் அஹமட் முஸ்லிம் பிரதேசங்களில் அதிக அபிவிருத்தி செய்தார், தமிழ் பிரதேசங்களை கவனிக்கவேயில்லையென்ற குற்றச்சாட்டு உள்ளது. அதை உறுதிப்படுத்தும் விதமாக, இந்த சம்பவத்தை குறிப்பிடலாம். முஸ்லிம் பகுதிகளில் அவர் எவ்வளவு கரிசனை காட்டினார் என்பதற்கும் ஒரு உதாரணம் உள்ளது.

ஏறாவூர் நகரசபை கட்டிடம் அமைக்க செலவு மதிப்பீடாக 80 மில்லியன் குறிப்பிடப்பட்டிருந்தது. திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, இறுதியில் மதிப்பிடப்பட்ட நிதியிலிருந்து 40 மில்லியன் அதிகமாக பாவிக்கப்பட்டு, 120 மில்லியனில் முடிக்கப்பட்டது. மேலதிக நிதியை வேறு நிதி மூலங்களில் இருந்து பெற்றார்.

இப்படியொரு அக்கறையை ஏன் தமிழ் பிரதேசசங்களில் காட்டவில்லை. தமிழரசுக்கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம், தண்டாயுதபாணி ஆகியோர் அமைச்சர்களாக இருந்தும், ஏன் தமிழ் பிரதேச வீதி அபிவிருத்திக்கு தடைக்கல்லாக இருந்தனர்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here