ஸ்ரேயாவுக்கு திருமணம்; ரஷ்யக் காதலரை மணக்கிறார்

நடிகை ஸ்ரேயாவுக்கும் ரஷ்ய தொழிலதிபர் ஆந்திரி கோஸ்செவுக்கும் மார்ச் 17-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

2001-ம் ஆண்டில் வெளியான இஷ்டம் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆனவர் ஸ்ரேயா. அதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினி, விஜய், ஆர்யா, விஷால், ஜெயம் ரவி, ஜீவா, தனுஷ், சிம்பு உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் நடித்துள்ளார். சல்மான் ருஷ்டியின் நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘மிட்நைட் சில்ட்ரன்’ என்ற ஆங்கிலப் படத்தில் நடித்திருக்கிறார்.

தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நரகாசூரன்’ படத்தில் அரவிந்த் சாமியுடன் நடித்து வரும் ஸ்ரேயா, தெலுங்கில் ஒரு படத்திலும், இந்தியில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

சமீபகாலமாக ரஷ்ய நண்பரை ஸ்ரேயா திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகின. அதற்கு மறுப்பு தெரிவித்த அவர் நான் இன்னும் திருமணத்துக்கு தயாராகவில்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில், தன் நீண்ட நாள் நண்பரும், தொழிலதிபருமான ரஷ்யாவைச் சேர்ந்த ஆந்திரி கோஸ்செவை ஸ்ரேயா திருமணம் செய்ய இருக்கிறார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் இவர்கள் திருமணம் மார்ச் 17-ம் தேதி நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here