இந்தவார ராசி பலன்கள் (24.3.2019- 30.3.2019)

ராகு புதன் குரு அனுகூல அமர்வில் உள்ளனர். பேச்சு, செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். உடன் பிறந்தவர்களால் உதவி கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலைத்திருக்கும். பூர்வீகச் சொத்து பாதுகாப்பில் கண்காணிப்பு அவசியம். புத்திரரின் செயலில் குழப்பம் ஏற்படலாம். பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியின் சொல்லும், செயலும் புதிய நம்பிக்கை அளிக்கும். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரிசெய்யவும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும். பெண்கள் உறவினர்களின் ஆதரவைப் பெறுவர். மாணவர்கள் படிப்பில் அக்கறையுடன் ஈடுபடுவர்.

பரிகாரம்: சாஸ்தா வழிபாடு இடர் நீக்கும்.

சூரியன் புதன் குரு சந்திரனால் நற்பலன் கிடைக்கும். உங்கள் பேச்சு, செயலில் புத்துணர்ச்சி ஏற்படும். உடன்பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள். வாகனத்தின் பயன்பாட்டால் நன்மை அதிகரிக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். மனைவியின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். தொழில் வியாபாரத்தில் நவீன மாற்றம் செய்வதால் வளர்ச்சி அதிகரிக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்கள் குடும்ப ஒற்றுமையை பாதுகாத்திடுவர். மாணவர்கள் தரத்தேர்ச்சி பெறுவர்.

சந்திராஷ்டமம்: 27.3.19 பகல் 12:58 மணி – 29.3.19 இரவு 10:39 மணி
பரிகாரம்: குரு வழிபாடு சுபவாழ்வு தரும்.

சூரியன் குரு சுக்கிரன் சந்திரன் அளப்பரிய நன்மை தருவர். வசீகரமாக பேசி அனைவரையும் கவர்வீர்கள். லட்சிய நோக்குடன் பணியில் ஈடுபடுவீர்கள். பூர்வ புண்ணிய நற்பலன் எதிர்பார்ப்பு நிறைவேற துணை நிற்கும். வீடு வாகனத்தில் உரிய பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றவும். புத்திரர் பெற்றோரின் வழிகாட்டுதல்களை ஏற்று நடப்பர். பணக்கடன் அடைபடும். மனைவியின் அன்பு பாசம் வீட்டில் மகிழ்ச்சியை தரும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி செய்வீர்கள். பணியாளர் கூடுதல் தொழில்நுட்பம் அறிந்து கொள்வர். பெண்களுக்கு தாய்வீட்டாரின் உதவி கிடைக்கும். மாணவர்கள் கோடைகால வகுப்பில் சேர்ந்து படிப்பர்.

சந்திராஷ்டமம்: 29.3.19 இரவு 10:40 மணி – 30.3.19 முழுவதும்.
பரிகாரம்: சிவன் வழிபாடு தைரியம் தரும்.

பெரும்பான்மை கிரகங்களால் தாராள நற்பலன் கிடைக்கும். உறவினர் அன்பு, பாசத்துடன் சொந்தம் பாராட்டுவர். வெளியூர் பயணத்தால் இனிய அனுபவம் காண்பீர்கள். வீட்டில் ஒற்றுமை, மகிழ்ச்சி நிறைந்திருக்கும். புத்திரர் நண்பர்களின் உதவியால் படிப்பு, செயல்திறனில் முன்னேறுவர். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். வழக்கு, விவகாரத்தில் சுமுக தீர்வு கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டி குறைந்து லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணி இலக்கை எளிதாக நிறைவேற்றுவர். பெண்கள் உறவினர்களின் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த உதவுவர். மாணவர்கள் படிப்பில் தரத்தேர்ச்சி பெறுவர்.

பரிகாரம்: சாஸ்தா வழிபாடு வெற்றி தரும்.

குரு ராகு சந்திரன் அனுகூலபலன் தருவர். சமயோசிதமாக செயல்பட்டு நற்பலன் காண்பீர்கள். தாய்வழி உறவினர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படலாம். புத்திரர் அறிவாற்றல், செயல்திறனில் மேம்படுவர். பூர்வீகச் சொத்தில் வளர்ச்சியும், பணவரவும் கூடும். விவகாரமாக பேசுபவரிடம் இருந்து விலகுவது நல்லது. மனைவியின் ஆர்வமிகு செயலை குறை சொல்ல வேண்டாம். வெளியூர் பயணத்தில் உரிய பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றவும். தொழில் வியாபாரத்தில்; அதிக உழைப்பினால் பணவரவு சீராகும். பணியாளர்கள் பணியில் குளறுபடி வராமல் செயல்படவும். பெண்கள் பேச்சு, செயலில் நிதானம் பின்பற்றவும். மாணவர்கள் யாரிடமும் விவாதங்களில் ஈடுபடக் கூடாது.

பரிகாரம்: பெருமாள் வழிபாடு செல்வம் தரும்.

புதன் சந்திரன் ஓரளவு நன்மை தருவர். பொதுவிஷயங்களில் கூடுதல் அக்கறை வேண்டாம். உற்சாக மனதுடன் பணிபுரிவது அவசியம். நற்பண்பு உள்ளவர்களின் உதவி கிடைக்கும். வாகனத்தில் பராமரிப்புச் செலவு கூடும். புத்திரரின் உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். பணவிஷயத்தில் கூடுதல் பாதுகாப்பு நடைமுறை பின்பற்றவும். மனைவியுடன் கருத்து பேதம் வளராமல் தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலங்களை பாதுகாத்திடுங்கள். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும். பெண்கள் இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் எதிர்கால கல்வி குறித்து சிந்திப்பர்.

பரிகாரம்: அம்பிகை வழிபாடு மகிழ்ச்சி தரும்.

கேது சனீஸ்வரர் சுக்கிரன் சூரியன் வியத்தகு அளவில் நற்பலன் தருவர். நண்பரிடம் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். புதிய வீடு வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். புத்திரர் பெற்றோரிடம் அன்பு பாசத்துடன் பழகுவர். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்திடும். மனைவி உங்களின் நல்ல குணத்தை மகிழ்ச்சியுடன் பாராட்டுவார். தொழில் வியாபாரத்தில் மறைமுகப்போட்டி குறையும். சேமிக்கும் அளவில் பணவரவு இருக்கும்.பணியாளர்கள் பணி இலக்கை எளிதாக நிறைவேற்றுவர்.வெளியூர் பயணத்தில் பாதுகாப்பு அவசியம். பெண்கள் தாராள செலவில் வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் அதிக ஆர்வம் கொள்வர்.

பரிகாரம்: சிவன் வழிபாடு சகல நன்மை தரும்.

சுக்கிரன் புதன் குரு நற்பலன் தருவர். அன்றாட பணிகளில் நிதானம் பின்பற்றவும். உடன்பிறந்தவர் ஓரளவு உதவுவர். வீடு வாகனத்தில் உரிய பாதுகாப்பு நடைமுறை பின்பற்றவும். புத்திரின் செயல்களை நெறிப்படுத்தி வெற்றிக்கு வழிவகுப்பீர்கள். எதிர்ப்பாளர் உங்களின் அந்தஸ்து கண்டு பொறாமை கொள்வர். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவி உங்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வார். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்யவும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும். பெண்கள் அதிக பயன் தராத பொருள் வாங்க வேண்டாம்;. மாணவர்களுக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும்.

பரிகாரம் : பைரவர் வழிபாடு பலம் சேர்க்கும்.

செவ்வாய் சுக்கிரன் சந்திரன் ஓரளவு நன்மையை வழங்குவர். அன்றாட செயல்களில் புதுமை நிறைந்திருக்கும். பொது இடங்களில் உங்கள் சொல்லுக்கு வரவேற்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்களுக்கு தேவையறிந்து உதவி செய்வீர்கள். வீடு வாகனத்தில் பராமரிப்பு செலவு கூடும். புத்திரர் படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேறுவர். வழக்கு, விவகாரங்களில் இருந்த நெருக்கடி குறையும். மனைவியின் மனதில் உங்கள் மீதான நம்பிக்கை வளரும். தொழிலில் வளர்ச்சி பெற நவீன சீர்திருத்தம் மேற்கொள்வீர்கள். பணியாளர்கள் சூழ்நிலை உணர்ந்து செயல்படுவது நல்லது. பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வேண்டாம். மாணவர்கள் பொதுஅறிவில் மேம்பட்டு விளங்குவர்.

பரிகாரம்: மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

சூரியன் சுக்கிரன் ராகு சந்திரனால் நற்பலன் கிடைக்கும். நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். செயல்கள் சிறப்பாக அமைந்து சமூகத்தில் புகழ் மேலோங்கும். வாகனப்பயன்பாடு அளவுடன் இருக்கும். புத்திரரின் சொல்லும், செயலும் வளர்ச்சியை நோக்கி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் உரிய கவனம் வேண்டும். மனைவி வழி சார்ந்த உறவினர் அதிக அன்பும் பாசமும் கொள்வர். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவீர்கள். பணியாளர்களுக்கு திருப்திகரமான நிலை உருவாகும். சலுகை படிப்படியாக கிடைக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் படிப்பில் முன்னேற கூடுதல் அக்கறை தேவை..

பரிகாரம் : துர்கை வழிபாடு சங்கடம் போக்கும்.

குரு சுக்கிரன் கேது சனீஸ்வரர் அளப்பரிய சுபபலன் தருவர். எதிர்பார்ப்பு நல்லமுறையில் நிறைவேறும். மனதில் தன்னம்பிக்கை மேலோங்கும். நண்பர்களின் மனதில் நல்ல அபிப்பிராயம் உருவாகும். உடல் ஆரோக்கியம் சீராகும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வர திட்டமிடுவீர்கள். மனைவி கருத்திணக்கமுடன் நடந்து கொள்வார். தொழில் வியாபாரம் புதியவர்களின் ஆதரவில் செழித்து வளரும். லாபம் கூடும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு, வெகுமதி பெறுவர். பெண்கள் குடும்ப ஒற்றுமை சிறந்து, சந்தோஷ வாழ்வு நடத்துவர். மாணவர்கள் ஞாபகத்திறனால் முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம்: முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.

சுக்கிரன் செவ்வாய் சந்திரன் நற்பலன் வழங்குவர். உதவி செய்தவர்களுக்கு நன்றி சொல்வீர்கள். சமயோசிதமாக செயல்பட்டு ஆதாயம் காண்பீர்கள். வாகனத்தின் பயன்பாட்டால் நன்மை இருக்கும். புத்திரர் பெற்றோரிடம் பாசத்துடன் பழகுவர். பூர்வ சொத்தில் பெறுகின்ற பணவரவு அதிகரிக்கும். விவகாரங்களில் சுமுக தீர்வு தாமதமாகலாம். மனைவி உங்களின் நல்ல குணங்களை பாராட்டுவார் .குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும் .விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அதிக உழைப்பால் வளர்ச்சி ஏற்படும். பணியாளர்கள் சலுகை பெறுவர். பெண்கள் பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்க வேண்டாம். மாணவர்கள் பெற்றோரின் தேவையறிந்து உதவுவர்.

சந்திராஷ்டமம்: 24.3.19 காலை 6:00 மணி – 25.3.19 அதிகாலை 5:46 மணி
பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு வெற்றியளிக்கும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here