விடுதலைப் புலிகளாலேயே நாட்டின் வனவளம் பாதுகாக்கப்பட்டது: ஜனாதிபதி பெருமிதம்!

நாட்டின் 28 சதவீத வனப் பகுதியே எஞ்சியுள்ளன. அந்த அடர்த்தியில் பெருமளவு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே உள்ளன. அப்பிரதேசங்களில் இடம்பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளின் காரணமாக வன வளம் பாதுகாக்கப்பட்டது. போர் இடம்பெறாத ஏனைய பிரதேசங்களில் அரசியல்வாதிகள் மற்றும் கடத்தல்காரர்களினால் வனவளம் அழிவுக்குள்ளாகியது என ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

திம்புலாகலை வெஹெரகல மகா வித்தியாலயத்தில் இன்று (21) முற்பகல் சர்வதேச வன பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்-

வவளம் உள்பட தாவரங்கள் மற்றும் உயிரினங்களின் பாதுகாப்பிற்கும் அரசைப் போன்றே அனைத்து குடிமக்களும் பொறுப்புடையவர்களாவர். நாட்டின் வன வளத்தை பாதுகாப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது.

எதிர்பார்க்கப்படும் வன அடர்த்தியை அதிகரிப்பதற்காக விரிவானதொரு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது.

நாட்டில் தற்போதுள்ள வன அடர்த்தியை பாதுகாப்பதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படாவிட்டால் இன்னும் சுமார் 15 ஆண்டுகளில் நாம் எமது வன வளத்தை இழக்க வேண்டியிருக்கும்.

நாட்டின் எஞ்சியுள்ள 28% வீத வன அடர்த்தியில் பெருமளவு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே உள்ளதுடன், அப்பிரதேசங்களில் இடம்பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளின் காரணமாக வன வளம் பாதுகாக்கப்பட்டது. போர் இடம்பெறாத ஏனைய பிரதேசங்களில் அரசியல்வாதிகள் மற்றும் கடத்தல்காரர்களினால் வனவளம் அழிவுக்குள்ளாகி இருக்கின்றது.

அரசு எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் அடைந்துகொள்ள எதிர்பார்க்கும் நாட்டின் வன அடர்த்தியை 32% வீதமாக அதிகரிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகொள்வதற்கு 1,48000 ஹெக்டெயார்களில் புதிதாக மரநடுகை செய்யப்பட வேண்டியுள்ளதுடன், இதில் வருடம் ஒன்றுக்கு 15,000 ஹெக்டெயர்களில் மரங்கள் நடப்பட வேண்டியுள்ளது.

இந்த நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரசு மற்றும் தனியார் துறை, அரச சார்பற்ற நிறுவனங்கள், பாடசாலை பிள்ளைகள் உள்ளிட்ட அனைத்து குடிமக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here