நடுவர்களின் தவறுகள் தொடர்கின்றன

2018 ஐபிஎல் போட்டிகளில் ஆட்டநடுவர்களின் தவறுகள் அதிகரித்துள்ள நிலையில் நேற்றைய முக்கிய போட்டியில் சரியான விதத்தில் வீசப்பட்ட பந்தை நடுவர் நோபோல் என அறிவித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மும்பாய் கொல்கத்தா அணிகளிற்கு இடையிலான நேற்றுமுன்தின போட்டியில் மும்பாய் அணி துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த வேளை 16 வது ஓவரில் இந்த தவறு இடம்பெற்றுள்ளது.

குரான் வீசிய பந்தை நோபோல் என நடுவர் கேஎன் அனந்த பத்மநாதன் அறிவித்துள்ளார். எனினும் தொலைக்காட்சிகள் குரான் அந்த பந்தை உரிய விதத்தில் வீசியை காண்பித்துள்ளன.

கொல்கத்தா அணியின் வீரர் ரிங்கு சிங் இதனை அணித்தலைவரிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தினேஸ் கார்த்திக் இது குறித்து நடுவரிடம் பேசியுள்ளார். எனினும் நடுவர் தனது முடிவை மாற்ற முடியாது என தெரிவித்துள்ளார்.
சில நாட்களிற்கு முன்னர் அன்றூ டை இவ்வாறான ஒரு நோபோலை சந்தித்திருந்மை குறிப்பிடத்தக்கது. ஆட்ட நடுவரின் தவறு காரணமாகவே இதுவும் இடம்பெற்றது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here