யுவதியின் மரணத்திற்கு காரணம் சட்டத்தரணியா?… யாழில் நெஞ்சை உருக்கும் சம்பவம்!

தனது சாவிற்கு சட்டத்தரணி ஒருவர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று யாழில் பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த 23 வயதுடைய நாகேஸ்வரன் கௌசிகா என்ற யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழ். மருதடியிலுள்ள தனது நண்பியின் இல்லத்தில் இவர் நேற்று பிற்பகல் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்வதற்கு முன்னர் யுவதி எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றை யாழ். பிராந்திய பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த யுவதி கடந்த வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான போதிலும் வீட்டு சூழ்நிலை காரணமாக பல்கலைக்கழகம் செல்லவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் யாழ். மாவட்ட விழிப்புலனற்றோர் சங்கத்தில் கடமையாற்றி வந்த இந்த யுவதி எழுதியுள்ள கடிதத்தில் “அந்த சங்கத்தின் தலைவரும் சட்டத்தரணியுமாக செயற்படுபவர் தான் தனது மரணத்திற்கு காரணம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறு ஊழல் தொடர்பான விடயங்களில் குறித்த சட்டத்தரணி தன்னை கட்டாயப்படுத்தி வந்ததுடன்,பெரும் தொகையான பணத்தை தான் திருடி விட்டதாக தெரிவித்து தற்போது அச்சுறுத்துவதாகவும், எனவே தான் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்ததாகவும் யுவதி எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுவதி பணியாற்றிய நிறுவனத்தின் கணக்கறிக்கையில் பத்து இலட்சம் ரூபா பற்றாக்குறை காண்பிக்கப்பட்டு, அது யுவதியின் பெயரில் பதியப்பட்டுள்ளது. அந்த நிதியை யுவதி திருடி விட்டதாக நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் சிலர்

குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து யுவதி பணியை விட்டு நின்றுள்ளார். இரண்டு நாட்களின் முன் யுவதியை அலுவலகத்திற்கு அழைத்து, உடனடியாக 2 இலட்சம் ரூபாவை கட்டுமாறு வற்புறுத்தியுள்ளனர்.

வறுமையான குடும்பத்தை சேர்ந்த யுவதி, சம்பவ தினம் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு, நண்பியின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். நண்பியின் குடும்பம் வெளியில் சென்ற நிலையில், அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு, வீட்டு திறப்பை பெற்று, அங்கு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here