செனட்டருக்கு முட்டையடித்த சிறுவன்!

அவுஸ்திரேலிய செனட்டர் ஒருவர் மீது முட்டையால் அடித்து தாக்கிய இளைஞன் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறான். இனவெறி பேச்சு பேசிய பிரசர் அன்னிங் என்பவர் மீதே, 17 வயது சிறுவன் முட்டை வீசினான்.

அவுஸ்திரேலியாவிற்குள் நுழையும் குடியேற்றவாசிகள் குறித்து இனவெறி பேச்சு பேசிவரும் இந்த செனட்டர், நியூசிலாந்து மசூதி தாக்குதல் குறித்தும் மோசமாக விமர்சித்தார். முஸ்லிம் குடியேற்றவாசிகளே இந்த தாக்குதலிற்கு காரணமென அவர் கூறியிருந்தார். இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன், அவர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று கூட்டமொன்றில் அன்னிங் பேசிக் கொண்டிருந்தபோது, பின்பக்கமாக வந்த சிறுவன், அவரது பின் தலையில் முட்டையால் அடித்தான். செனட்டரும் பதிலுக்கு தாக்கினார். பின்னர், அவரது காவலர்கள் சிறுவனை மடக்கிப்பிடித்தனர்.

இனவெறி பேச்சு பேசிய செனட்டருக்கு முட்டையடித்த சிறுவனை சமூக வலைத்தளத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர். என்ற ஹாஷ்டேக்கில் சிறுவன் ட்ரெண்டிங்காகியுள்ளான்.

#EggBoy

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here