இந்தவார ராசிபலன்கள் (17.3.2019- 23.3.2019)


ராகு புதன் குரு அனுகூல அமர்வில் உள்ளனர். பேச்சு, செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும். உடன் பிறந்தவர்களால் உதவி கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலைத்திருக்கும். பூர்வீகச் சொத்து பாதுகாப்பில் கண்காணிப்பு அவசியம். புத்திரரின் செயலில் குழப்பம் ஏற்படலாம். பணக்கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியின் சொல்லும், செயலும் புதிய நம்பிக்கை அளிக்கும். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரிசெய்யவும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும். பெண்கள் உறவினர்களின் ஆதரவைப் பெறுவர். மாணவர்கள் படிப்பில் அக்கறையுடன் ஈடுபடுவர்.

பரிகாரம்: சாஸ்தா வழிபாடு இடர் நீக்கும்.

குரு சுக்கிரன் புதன் சூரியன் அனுகூல அமர்வில் தீபஸ்தம்ப யோக பலன் தருவர்.குன்றின் மேல் ஏற்றி வைத்த விளக்கு போல வாழ்க்கைத்தரம் மேம்படும். மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். பணிகளை அக்கறையுடன் நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களின் உதவி உண்டு. புதிய வீடு, வாகனம் திட்டமிட்டபடி வாங்கலாம். புத்திரர் பெற்றோரின் சொல்லை ஏற்று செயல்படுவர். உங்களை அவமதித்து பேசியவர் தவறை உணர்ந்து அன்பு பாராட்டுவர். பூர்வீகச் சொத்தில் வளர்ச்சி ஏற்படும். சத்தான உணவு வகைகளை உண்டு மகிழ்வீர்கள். மனைவியின் சொல்லும், செயலும் குடும்பத்திற்கு நற்பெயர் தேடித் தரும். தொழிலில் மறைமுகப் போட்டி குறைந்து உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் பணம் சேமிப்பதில் ஆர்வம் கொள்வர். மாணவர்கள் ஆர்வமுடன் படித்து முன்னேறுவர்.

பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.

சூரியன் சுக்கிரன் குரு சந்திரன் அளப்பரிய நன்மை வழங்குவர். நண்பர்களிடம் பெற்ற நற்பெயரை பாதுகாத்திடுவீர்கள்.குடும்ப செலவுக்கான பணம் தாராளமாக கிடைக்கும். இளமைக் கால நண்பரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். புத்திரர் படிப்பு, வேலைவாய்ப்பில் மேம்படுவர். வழக்கு, விவகாரங்களில் சமயோசித அணுகுமுறையால் நல்ல தீர்வு கிடைக்கும். மனைவி ஜாதகத்தின் யோகபலனால் நன்மை காண்பீர்கள். தொழில் வியாபாரம் செழித்து வளர்ந்து லாபம் அதிகரிக்கும்.பணியாளர்கள் திட்டமிட்ட பணியிலக்கை நிறைவேற்றுவர். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்களுக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும்.

பரிகாரம் : சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

கேது சனீஸ்வரர் புதன் செவ்வாய் சந்திரனால் அனுகூலபலன் கிடைக்கும். புதிய உத்தி மூலம் திட்டமிட்ட பணிகளை முடிப்பீர்கள். சமூக நிகழ்வுகளால் இனிய அனுபவம் கிடைக்கும். வாகன பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். புத்திரர் உங்கள் வழிகாட்டுதல்களை அன்புடன் ஏற்றுக் கொள்வர். உறவினர்களின் உதவியால் குடும்பத்தில் ஒற்றுமை கூடும்.நோய் தொந்தரவு குறையும்.விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.மனைவியின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சியும் பணவரவும் கூடும். அரசு சார்ந்த உதவி கிடைக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.பெண்கள் கணவரின் அன்பு மழையில் நனைவர். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.

பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நல்லது.

குரு ராகு சந்திரன் ஆதாயபலன் தருவர். பொதுவிஷயங்களில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர் படிப்பில் முன்னேறுவர். ஆன்மிகத்திலும் ஆர்வம் கொள்வர். ஆரோக்கியம் பலம்பெறும்;. விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். உறவினர் வகையில் செலவு அதிகரிக்கும். மனைவியின் கருத்து குடும்பத்தில் ஒற்றுமையை பாதுகாக்கும். தொழில், வியாபாரத்தில் அளவான வளர்ச்சி ஏற்படும். பணியாளர்கள் பணி இலக்கை கூடுதல் அவகாசத்தில் நிறைவேற்றுவர்.சலுகை ஓரளவு கிடைக்கும்.பெண்கள் உறவினர்களின் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த உதவுவர். மாணவர்கள் கவனமுடன் படிப்பது அவசியம்.

பரிகாரம்: முருகன் வழிபாடு நன்மை தரும்.

சுக்கிரன் புதன் சந்திரனால் நற்பலன் கிடைக்கும்.திட்டமிட்ட பணிகளை அக்கறையுடன் செயல்படுத்துவீர்கள்.நற்பெயரும் புகழும் தேடி வரும். வாகனத்தின் பயன்பாடு அளவாக இருக்கும். புத்திரர் படிப்பு வேலையில் முன்னேற்றம் காண்பர்.வழக்கு விவகாரத்தில் வெற்றி கிடைக்கும். அதிக நிபந்தனையுடன் பணம் கடன் பெற வேண்டாம். மனைவி ஒற்றுமையுடன் குடும்பநலனில் அக்கறை கொள்வார். தொழிலில் உற்பத்தி விற்பனை புதியவர்களின் ஆதரவால் பெருகும். பணியாளர்கள் கூடுதல் வேலை வாய்ப்பை ஆர்வமுடன் ஏற்பர்.பெண்கள் தாய்வீட்டாரின் உதவியை கேட்டுப்பெறுவர். மாணவர்கள் படிப்பில் முன்னேற நண்பர் உதவுவார்.

பரிகாரம்: பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.

கேது சனீஸ்வரர் சுக்கிரன் சூரியன் வியத்தகு அளவில் நற்பலன் தருவர். நண்பரிடம் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். புதிய வீடு வாகனம் வாங்க கடனுதவி கிடைக்கும். புத்திரர் பெற்றோரிடம் அன்பு பாசத்துடன் பழகுவர். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்திடும். மனைவி உங்களின் நல்ல குணத்தை மகிழ்ச்சியுடன் பாராட்டுவார். தொழில் வியாபாரத்தில் மறைமுகப்போட்டி குறையும். சேமிக்கும் அளவில் பணவரவு இருக்கும்.பணியாளர்கள் பணி இலக்கை எளிதாக நிறைவேற்றுவர்.வெளியூர் பயணத்தில் பாதுகாப்பு அவசியம். பெண்கள் தாராள செலவில் வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் அதிக ஆர்வம் கொள்வர்.

பரிகாரம்: சிவன் வழிபாடு சகல நன்மை தரும்.

குரு சுக்கிரன் புதன் சுபபலன் வழங்குவர். உங்கள் பேச்சில் உண்மையும் நேர்மையும் நிறைந்திருக்கும். விலகிய உறவினர்கள் விரும்பி சொந்தம் பாராட்டுவர்.வாகனத்தில் அபிவிருத்திப்பணி மேற்கொள்வீர்கள். புத்திரர் அறிவார்ந்த செயலால் பெற்றோர்க்கு பெருமை தேடித் தருவர். நண்பரிடம் கடனாக கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். மனைவியின் கருத்துக்கு முக்கியத்துவம் தந்து குடும்ப ஒற்றுமையை பாதுகாத்திடுவீர்கள்.வெளியூர் பயணத்தால் இனிய அனுபவம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர் பணியிடத்தின் சூழல் உணர்ந்து பணிபுரியவும். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும்.மாணவர்கள் படிப்பில் வளர்ச்சி அடைவர்.

பரிகாரம்: விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

செவ்வாய் சுக்கிரன் சந்திரன் அளப்பரிய நற்பலன் தருவர். மனதில் உத்வேகமும், செயல்களில் வசீகரமும் ஏற்படும்.குடும்பத்தில் சுபநிகழ்வு உண்டாகும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். புத்திரரின் தேவையை தாராள பணச்செலவில் நிறைவேற்றுவீர்கள்.எதிரியிடம் விலகுவதால் வீண் பிரச்னை வராமல் தவிர்க்கலாம்.உறவினர்களின் அன்பும் பாசமும் நம்பிக்கையைத் தரும். மனைவியின் இணக்கமான செயல்பாடு குடும்ப வாழ்வை சிறப்பாக்கும்.தொழில் வியாபாரத்தில் கூடுதல் உழைப்பால் பணவரவு சீராகும். பணியாளர்கள் பணியிடத்தில் விவாதம் பேச வேண்டாம். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர்.மாணவர்கள் பாதுகாப்பு குறைந்த இடங்களில் செல்வது கூடாது.

சந்திராஷ்டமம்: 17.3.19 காலை 6:00 – 18.3.19 இரவு 7:05 மணி
பரிகாரம்: தன்வந்தரி வழிபாடு நன்மை தரும்.

சூரியன் ராகு சுக்கிரன் சந்திரன் நற்பலன் வழங்குவர். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நண்பர்கள் உங்களிடம் ஆலோசனை கேட்டுப் பெறுவர். தாய்வழி உறவினர்கள் அதிக பாசத்துடன் பழகுவர்.புத்திரரின் ஆர்வம் மிகுந்த செயல் நிறைவேற உதவுவீர்கள், குலதெய்வ அருள்பலத்தால் நன்மை காண்பீர்கள். எதிரி சொந்த சிரமங்களால் இடம் மாறிச் செல்வர். சத்தான உணவு உண்பதால் ஆரோக்கியம் பலம் பெறும். மனைவியின் பேச்சு, செயலில் நம்பிக்கை மேலோங்கும். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை உருவாகும்.பணியாளர்கள் நிர்வாகத்திடம் நன்மதிப்பு காண்பர். பெண்கள்; புத்தாடை நகை வாங்குவர்.மாணவர்கள் வெளியிடம் சுற்றுவதை குறைக்கவும்.

சந்திராஷ்டமம்: 18.3.19 இரவு 7:06 – 20.3.19 இரவு 9:32 மணி வரை
பரிகாரம்: அம்பிகை வழிபாட்டால் நிம்மதி நிலைக்கும்.

குரு சனீஸ்வரர் கேது சுக்கிரன் அளப்பரிய நற்பலன் வழங்குவர்.உங்கள் பேச்சில் புதுமையான கருத்துக்கள் மிகுந்திருக்கும். இரக்க சிந்தனையால் மற்றவருக்கு உதவுவீர்கள். குடும்பத்திற்கான தேவைகளும் எளிதில் நிறைவேறும். புதிய வீடு, வாகனம் வாங்க அனுகூலம் ஏற்படும். புத்திரர் பெற்றோர் சொல்லை தயக்கமுடன் ஏற்றுக் கொள்வர். இஷ்ட தெய்வ அருளால் கடன் தொந்தரவு குறையும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.தொழிலில் உற்பத்தி விற்பனை செழித்து புதிய சாதனை உருவாகும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்கள் குடும்ப எதிர்கால நலன் குறித்து கணவரிடம் ஆலோசிப்பர். மாணவர்கள் நண்பர்களின் உதவியால் படிப்பில் முன்னேறுவர்.

சந்திராஷ்டமம்: 20.3.19 இரவு 9:33 – 22.3.19 இரவு 12:53 மணி
பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு சுபவாழ்வு தரும்.

சுக்கிரன் செவ்வாய் சந்திரன் அனுகூலபலன் தருவர். வீண் பேச்சு பேசுபவரிடம் விலகவும். குடும்ப செலவுக்கு அதிக பணம் தேவைப்படும். அறிமுகம் இல்லாதவருக்கு வீடு வாகனத்தில் இடம் தர வேண்டாம். புத்திரர் தமது விருப்பம் நிறைவேற்ற பிடிவாத குணத்துடன் செயல்படுவர். அளவான உழைப்பும், சீரான ஓய்வும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பணவிஷயத்தில் உரிய பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றவும். மனைவியிடம் உறவினர்களின் குடும்ப விவகாரம் பற்றி பேசக் கூடாது. தொழிலில் உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் இருக்கும்.பணியாளர்கள் பணியிடச்சூழல் உணர்ந்து செயல்படுவது நல்லது. பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் விடாமுயற்சியுடன் ஈடுபடுவர்.

சந்திராஷ்டமம்: 22.3.19 இரவு 12:54 மணி – 23.3.19 நாள் முழுவதும்.
பரிகாரம் : துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here