விவாகரத்தான யாழ்ப்பாண பெண்ணுடன் உல்லாசமாக திரியும் ஆர்யா!

தென்னிந்திய திரைப்பட நடிகர் ஆர்யா யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து அலப்பறை செய்து வருகிறார். அவரை பார்ப்பதற்கு வயது வேறுபாடின்றி யாழ்ப்பாண ரசிகர்கள் பலர் முண்டியடிப்பதையும் அவதானிக்க முடிகிறது.

இதேவேளை, ஆர்யாவுடன் கனடாவில் வாழும் இலங்கை பெண் ஒருவரும் வந்துள்ளார். ஆர்யா பெண் பார்க்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள இந்த பெண்ணின் பெயர் சுசனா. விவாகரத்தான இவர், ஆர்யாவை திருமணம் செய்ய இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

நேற்று யாழ் நூலகத்தில் விதிமுறையை மீறி ஆர்யா குழுவினர் படப்பிடிப்பு நடத்தியபோது, பெருமளவு இளைஞர்கள் அவருடன் செல்பி எடுக்க முண்டியடித்தனர். இன்று ஆர்யா தீவுப்பகுதிக்கு செல்கிறார் என்ற தகவல் கிடைத்ததும், அங்குள்ள வயோதிபர்கள் சிலர் காலையிலிருந்தே மாலையும் கையுமாக நின்ற வெடிக்கையான சம்பவமும் நடந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here