திருநாவுக்கரசு வீட்டில் அதிரடி சோதனை: வகைதொகையின்றி ஆணுறைகள் மீட்பு!

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சிபிசிஐடி ஐ.ஜி. தலைமையிலான 5 பேர் குழு விசாரணையை துவக்கி உள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் பலாத்காரம் மற்றும் அது சார்ந்த ஆபாச விடியோ எடுக்கப்பட்ட விவகாரம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது. தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறன்றன.

இதனிடையே பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை சிபிசிஐடிக்கு மாற்றி, தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், கோவை மாவட்டம், சின்னம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசு வீட்டில், சிபிசிஐடி ஐ.ஜி. ஸ்ரீதர், மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா தலைமையிலான 5 பேர் கொண்ட குழு அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, திருநாவுக்கரசு வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த பொருட்கள் பல அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. வீட்டருகே இருந்த குப்பை கிடங்கை சோதனை செய்ததில் ஏராளம் ஆணுறைகளும், மது பாட்டில்களும் கிடந்ததை கண்டும் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் தடயங்களை சேகரித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இந்த வழக்கில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது தொடர்பாகவும், அரசியல் பின்புலம் மற்றும் ஆதரவு தொடர்பாகவும் சிபிசிஐடி விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி இந்த விவகாரத்தில் சுதந்திரமாக விசாரிக்க முடியாது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. வழக்கு தொடர்பான விசாரணை எவ்வித பாரபட்சமுமின்றி நடைபெறும் என்று சிபிசிஐடி ஐ.ஜி. ஸ்ரீதர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here