13 வயது மாணவியை சீரழித்த உப அதிபர் கைது!

பாடசாலை மாணவியொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்வம் தொடர்பில் அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் உப அதிபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சூரியவெவ – அந்தரவெவ பகுதியை சேர்ந்த 8 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 13 வயதான மாணவியே பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தமக்கு வந்த தொலைபேசி அழைப்பிற்கு அமைய செயல்பட்ட அங்குனுபெலஸ்ஸ காவல்துறையினர் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது குறித்த மாணவியை உப அதிபர், பலமுறை இவ்வாறு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மாணவிக்கும் அதிபருக்கும் இடையே காணப்பட்ட நட்பினால் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் குறித்த பாடசாலையில் மாணவி சேர்க்கப்பட்டுள்ளார்.

பின்னர் உப அதிபர் அங்குனுபெலஸ்ஸ நகரில் அமைந்துள்ள அவருக்கு சொந்தமான கட்டிடத்தின் மேல் மாடியில் மாணவியை தங்க வைத்து இவ்வாறு பலமுறை அவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

மாணவி வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய உப அதிபர் கைது செய்ய்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here