‘துரோகி ஆகாதீர்கள்’: தமிழ் அரசியல்வாதிகளிற்கு எச்சரிக்கை!

“காணாமல் போன தமது பிள்ளைகளுக்காக காத்திருந்து உயிரிழந்த ஆத்மாக்களுக்கு துரோகம் செய்துவிடாமல் அவர்களுக்காக பேசுங்கள். இல்லையேல் துரோகியாகி விடுவீர்கள்” என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெனீவா மனித உரிமைகள் சபைக்கு வடக்கு ஆளுநர் சுரேன் ராகவனை நேற்று புதன் கிழமை சந்தித்த பின்னர் யாழ். ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை அவர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

அங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

எமது பிரச்சினைகளுக்கு தீர்வு தருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது மறப்போம் மன்னிப்போம் என்ற கோட்பாட்டை கடைபிடித்து, பழையவற்றை கிளறாதீர்கள் என கூறி வருகின்றனர்.

அரசாங்கத்தினால் ஒன்றும் நடக்காத நிலையிலேயே நாங்கள் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.

இந்நிலையில், ஜெனீவா செல்பவர்களுக்கு நாங்கள் கூறுவது எங்களிடமிருந்து எதற்காக வாக்கு பெற்றீர்களோ? அந்த நிலைப்பாட்டிலிருந்து விலகாதீர்கள். அந்த மக்களுக்காக ஒரு தடவையாவது செயற்படுங்கள்.

ஐ.நா. பிரேரணையை நிறைவேற்ற இரண்டு முறை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதன்போது ஒன்றும் செய்யாதவர்கள் மீண்டும் கால அவகாசத்தை பெற்று எதனை சாதிக்கப் போகிறார்கள் எனக் கேள்வி எழுப்பினர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here