ஆசிரியரின் தாக்குதலினால் மாணவர்கள் வைத்தியசாலையில்!

காத்தான்குடி பூநொச்சிமுனை பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் ஆசிரியர் ஒருவரினால் தாக்குதலுக்குள்ளான 18 மாணவர்கள் காத்தாண்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த ஆசிரியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் அப்பாடசாலையின் ஐந்தாம் தர சிறுவர்கள் மீதே மேற்படி கைகளினாலும், தடியினாலும் தாக்குதல் நடத்தியுள்ளதாக முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் குறித்த ஆசிரியர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே குறித்த பாடசாலைக்கு வந்ததாகவும், அவரின் நடவடிக்கைகள் சரியில்லாத காரணத்தினால் ஏற்கனவே அவரை இடம்மாற்றக்கோரி அதிகாரிகளிடம் முறையிட்டதாகவும் பாடசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here