முஸ்லிம் ஆயுதக்குழு: ஹக்கீம், ரிசாட்டை தொடர்ந்து கபீர் ஹாசிமும் விசேட பாதுகாப்பு கோரினார்!

மாவனல்ல துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து, பல்வேறு விதமான ஊகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. முஸ்லிம் சமூகத்தில் ஜிகாத் அமைப்பையொத்த ஆயுதக்குழு ஒன்று இரகசியமாக இயங்க ஆரம்பித்துள்ளது என்று ஒரு தரப்பில் கூறப்படுகிறது.

பொதுவாகவே, முஸ்லிம் சமூகத்தில் தனிநபர் ஒருவரின் செயற்பாட்டையும், சமூகத்தின் செயற்படாக நோக்கும் உலகப்பார்வையொன்று உருவாகி விட்டது.

அதேவேளை, ஆயுதக்குழு அபிப்பிராயத்தை பெரும்பாலான மக்கள் நிராகரிக்கிறார்கள். இலங்கை புலனாய்வு வலையமைப்பு உலகத்தரம் வாய்ந்தது என இலங்கை அரசும், பாதுகாப்பு தரப்பும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் குறிப்பிட்டு வருகையில், அப்படியொரு ஆயுதக்குழு இருக்கும் தகவல் உண்மையென்றால், அதை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியதுதானே என்கிறார்கள்.

மாவனல்ல சாதாரண நகரமல்ல. நெருக்கடியான வர்த்தக நகரம். துப்பாக்கிச்சூட்டாளர்கள் அங்குள்ள ஒரு சிசிரிவி கமராவிலும் சிக்காமல், மாயாவியாக வந்தார்களா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இதற்கெல்லாம் பாதுகாப்பு தரப்பினரின் நடவடிக்கைதான் பதில் சொல்லும்.

நாம் அந்த விடயத்தை ஆராயவில்லை. இதையொட்டி நடந்த சம்பவங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதுதானே ஊடகங்களின் பணி. அதை செய்கிறோம்.

மாவனல்ல துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து, முஸ்லிம் சமூகத்தின் இரண்டு முக்கிய கட்சிகளின் தலைவர்களும் மேலதிக விசேட அதிரடிப்படை பாதுகாப்பை கோரியதை நேற்று தமிழ்பக்கத்தில் குறிப்பிட்டிருந்தோம். தனியே பாதுகாப்பை மட்டும் அவர்கள் கோரவில்லை. முஸ்லிம் சமூக்தின் மத்தியில் ஆயுதக்குழுவொன்று இயங்குவதாக கூறப்படுவதை குறிப்பிட்டு, அது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியிருந்தனர்.

இப்போது, மேலதிகமாக இன்னொரு தகவலையும் தருகிறோம்.

இதை மிஸ் பண்ணாதீர்கள்: முஸ்லிம் ஜிகாத் ஆயுதக்குழுவால் உயிராபத்து:ஹக்கீம், ரிசாட் மேலதிக பாதுகாப்பை கோரினர்!

ஹக்கீம், ரிசாட் இந்த கோரிக்கை வைத்ததற்கு மறுநாள்- நேற்று முன்தினம்- ஐ.தே.கவின் அமைச்சர் கபீர் ஹாசீம், இதேவிதமான கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் விடுத்துள்ளார். அவரும் எழுத்துமூல கோரிக்கையே விடுத்துள்ளார்.

தனக்கு மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு கோரியுள்ளதுடன், இந்த துப்பாக்கிச்சூடு- ஆயுதக்குழு விடயத்தில் உடனடி நடிவடிக்கை எடுக்கும்படியும் வலியுறுத்திக் கேட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here