ரொனால்டோ ஹட்ரிக்: காலிறுதியில் யுவன்டஸ்!

சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிக்கு யுவன்டஸ் அணி முன்னேறியது. அத்லெடிகோ மாட்ரிட் அணிக்கு எதிரான ரவுண்ட் 16 சுற்றுக்கான 2வது போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹட்ரிக் கோலடித்து கைகொடுக்க 3-0 என வெற்றி பெற்றது.

ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகள் மோதும் சம்பியன்ஸ் லீக் தொடரின் 64வது சீசன் நடக்கிறது. இதன் ரவுண்ட்16 சுற்றுப் போட்டியில் யுவன்டஸ் (இத்தாலி), அத்லெடிகோ மாட்ரிட் (ஸ்பெயின்) அணிகள் மோதின.

ஸ்பெயினில் நடந்த ரவுண்ட்16 சுற்றுக்கான முதல் போட்டியில் அத்லெடிகோ மாட்ரிட் அணி 2-0 என வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டி இத்தாலியில் உள்ள டுரின் நகரில் நடந்தது. அபாரமாக ஆடிய யுவன்டஸ் அணிக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹட்ரிக் கோலடித்து (27, 49, 86வது நிமிடம்) கைகொடுத்தார். கடைசி நிமிடம் வரை போராடிய அத்லெடிகோ மாட்ரிட் அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் யுவன்டஸ் அணி 3-0 என வென்றது.

இரண்டு போட்டிகளின் முடிவில் யுவன்டஸ் அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது.

மான்செஸ்டர் சிட்டி அபாரம்

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடந்த மற்றொரு ரவுண்ட் 16 சுற்றுக்கான 2வது போட்டியில் மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து) அணி 7-0 என்ற கோல் கணக்கில் சால்கே 04 (ஜெர்மனி) அணியை வென்றது. ஏற்கனவே முதல் போட்டியில் 3-2 என வென்றிருந்த மான்செஸ்டர் சிட்டி அணி, ஒட்டுமொத்தமாக 10-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here