பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: ஒரு வீடியோவுக்கு ரூ.40,000

பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் புகார்தாரர்கள், குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் என இரு பிரிவுகளிலுமே பல்வேறு கட்சிகளை சேர்ந்த நபர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். முதலில் தாங்கள் தாக்கப்பட்டதாக போலீஸில் திருநாவுக்கரசு தரப்பு தான் புகார் செய்திருக்கிறது. பெண்ணின் தரப்பு போலீஸூக்கு பயந்து தலைமறைவாகி இருக்கிறார்கள். அவர்கள் பிறகு வேறு ஒரு நபர் உதவியுடன் தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் ஜெயராமனை அணுகியுள்ளனர்.

ஜெயராமனும் வீடியோ விவகாரம், பாலியல் துன்புறுத்தல் விஷயங்களை கணக்கில் கொண்டு, ‘ஏய்யா நீங்கதானே புகார் தந்திருக்கணும். அவங்கள்ல ஓடி ஒளிஞ்சு திரியணும்!’ என சொல்லி அவர்களை போலீஸில் புகார் செய்யச் சொல்லியிருக்கிறார். அவர்களும் பெண் வன்கொடுமை புகார் தரவேதான், ஜெயராமன் சிபாரிசுடன் திருநாவுக்கரசு தரப்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருநாவுக்கரசு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி, ஒரு கட்சியின் பிரமுகரை அணுக, அவர்தான் திருநாவுக்கரசுக்கு இப்படியெல்லாம் அரசியல் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததாக சொல்லியிருக்கிறார்கள். அதை ஒரு கட்சியின் ஐடி விங்க் சாமர்த்தியமாக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இதில் ஒரு பிரபலமான நபர், குறிப்பிட்ட ஒரு பெண்ணின் கதறல் வீடியோவை மட்டும் ரூ. 40 ஆயிரத்துக்கு வாங்கி வெளியிட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். அதுவும் 40 நிமிடம் ஓடக்கூடிய காட்சிகள் 4 நிமிடமாக சுருக்கி டப்பிங் செய்தே வெளியிட்டிருக்கிறார்கள்.

‘‘இதில் அகப்பட்டது நான்கைந்து வீடியோக்கள்தான். சில பெண்களை மட்டுமே அதில் போலீஸ் அடையாளம் கண்டுபிடித் திருக்கிறது. அவர்களில் இருவர் திருமணமாகி குழந்தைகளை வைத்திருக்கிறார்கள். நாங்கள் எங்களுடன் 4 பெண்களை புகார் தரவும் தயார் படுத்தியிருந்தோம். போலீஸூம் தன் தரப்பில் 4 பெண்களை புகார் தர தயார்படுத்தியிருந்தது. இதில் எதிர்பாராமல் வீடியோ வெளியாகி அரசியல் ஆகிவிட்டது. அதனால் புகார் தர முன் வந்த பெண்கள் எல்லாம் பயந்து ஒதுங்கி விட்டார்கள். நாங்கள் நடந்ததை எங்கள் பெண்ணின் குரலாய் பதிவு செய்து இன்னும் சில நாட்களில் வெளியிட முடிவு செய்துள்ளோம்!’’ என புகார் தந்த பெண் தரப்பினர் கூறியுள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here