விவேக்கை பார்க்க முண்டியடித்த மக்கள்!

நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று மட்டக்களப்பு நகரில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்திய விவேக், காந்தி பூங்காவில் மரக்கன்று நட்டினார். பின்னர், நீருற்று பூங்காவில் உள்ள சுவாமி விபுலானந்தரின் திருவுருவச்சிலைக்கும் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார்.

தொடர்ந்து மட்டக்களப்பு மாநகரசபைக்கு சென்று மாநகரசபையினை பார்வையிட்டார். அங்கு விவேக்கிற்கு பொன்னாடை போர்த்தப்பட்டு, நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து மாநகரசபையில் ஊழியர்களை சந்தித்த உரையாற்றினார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், ஆணையாளர் க.சித்திரவேல், மாநகரசபை உறுப்பினர்கள், ஊழியர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நடிகர் விவேக்கை பார்க்க பெருமளவானவர்கள் முண்டியடித்ததை அவதானிக்க முடிந்தது. அவரிடம் ஆர்வமாக கையொப்பமும் பெற்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here