தனுசு ராசிக்கு 7 இல் ராகு வந்தால் யோகமா? தோஷமா?

கேது மற்றும் சனி ஆகிய இரண்டு கிரகங்களும் ஒன்றாக இணையும் போது ஜாதகருக்கு எந்தமாதிரியான பாதிப்பு ஏற்படுத்தும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

கேது தற்போது இருக்கும் இடம் என்றால் அது தனுசு ராசியில் தான். ராசியில் கேதுவும் சனியும் ஒன்றாக இணைந்து சஞ்சாரம் செய்து வருகின்றனர். பொதுவாகவே இந்த இரண்டு கிரகங்களும் நன்மை செய்யாத கிரகங்களாகும்.

தனுசு ராசியில் கூட்டு சேர்ந்துள்ள இரண்டு கிரகங்களும் எந்தமாதிரியான பலனைத்தரப்போகிறது என்று பார்க்கலாம்.

இரண்டு கிரகமும் ராசியில் ஒன்றாக சேர்ந்தால் என்னவாகும் என்றால, உடல் ஆரோக்கியம் அதிகமாக பாதிக்கப்படும். ஒருவேளை தசாபுத்தி நன்றாக இருந்தால் தப்பிக்கலாம்.

இல்லையெனில், ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் முதல் பெரிய பாதிப்புகள் வரை ஏற்படுத்தும். ஜெனனகால ஜாதகத்தை பொருத்து, அவரவரின் வயதை பொருத்து நடைபெறுகின்ற தசாபுத்தியை பொருத்து பலனைக் கொடுக்கும்.

சின்ன பாதிப்பா, பெரிய பாதிப்பா இல்லை 365 நாட்களும் மருந்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படுமா? அல்லது சில  நாட்கள் மருந்து எடுத்துக்கொண்டால் சரியாகுமா? எந்த அளவுக்கு தீவிர தன்மை இருக்கும் என்பது உங்களின் ஜெனன கால ஜாதகத்தைப் பொருத்தே சொல்ல முடியும்.

நோய்களுக்கும் நவக்கிரகங்களுக்கு நிறைய தொடர்புள்ளது. அந்தவகையில், எந்த கிரகம் எந்த இடத்தில் வந்தால் எந்த நோய் ஏற்படும்? நிரந்திரமாக நீடிக்குமா? விரைவில் சரியாகுமா? இல்லை கூடவே நீடிக்குமா? என்று நோயைப் பற்றி நிறைய விஷயம் அலசி ஆராயலாம்.

ஆனால், சனி கேது சேர்க்கை என்பது நோயை ஏற்படுத்தும் என்பது உறுதி. அவரவர் ஜெனனகால ஜாதகத்தை பொருத்து நோயின் வீரியதன்மை மாறுபடும். பெரும்பாலும், இந்த சேர்க்கையானது ஒரு சிலருக்கு தோல் வியாதியை ஏற்படுத்தும். எந்த மாதிரியான நோய் என்றால், கன்னத்தின் இரண்டு பக்கமும் கருப்பாக பேச்சஸ் போல் உண்டாகலாம். சிலருக்கு வெள்ளையாக திட்டு போன்று உடலில் வெண்நோய் ஏற்பட்டு மறையலாம்.

சரி, தற்போது கிரகநிலைப்படி தனுசுக்கு 7-ல் ராகு வந்துள்ளது. இது யோகமா? தோஷமா என்றால்? ராகு எப்போதும் யோகம் தரக்கூடிய கிரகம், எனவே, எந்த இடத்தில் ராகு இருந்தாலும் அது 100 சதவீதம் நன்மையை மட்டும் தான் செய்யும்.

மேலும், 7-ல் ராகு இருந்தால் வாழ்க்கைத்துணைக்கு மிகப்பெரிய யோகத்தைத் தரும். திருமணமான ஆண் என்றால் மனைவிக்கும், பெண் என்றால் கணவருக்கும் யோகம் தரும். கேது தோஷம் என்றால் ராகு யோகம் என்றே கூறுவர். 7-ல் ராகு வந்தால் தம்பதியரின் இல்வாழ்க்கை நன்றாக இருக்கும், வாழ்க்கைக்கு தேவையான சுகபோகத்தை தரக்கூடியவர் இவர்தான்.

கேது-சனி சேர்க்கையில் இருந்து நம்மை எப்படி காப்பாற்றிக்கொள்வது?

சனி, கேது என்பது கடுமையான கிரகச் சேர்க்கையாகும். எனவே, இறைவனின் திருவடியை சரணாகதி அடைவதை தவிர வேறு வழியில்லை. தனுசு ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்கி வரலாம். .

பொதுவாக சனிக்கிழமையில் சிவன் ஆலயங்களில் வழிபாடு செய்து வந்தால் நவக்கிரக தோஷங்கள் விலகும். முத்துசாமி திக்ஷிதர் இயற்றிய திவாகர தனுஜம் என்ற பாடலை பாடுவதும், கோளறு பதிகத்தை படித்து வரலாம்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here