‘பார்க்கவே பாவமா இருக்கு’… பறித்த பணத்தை திருப்பிக் கொடுத்த ‘திருடர்’ : வீடியோ

ஒரு குற்றம் நடந்தால்… அதன் வீடியோ வெளியானால், என்ன நடக்கும்?

குற்றத்தில் ஈடுபட்டவர்களை இணையவாசிகள் ஒரு பிடி பிடிப்பார்கள். ஆனால், இதற்கு மாறாக, உலகமெல்லாம் பாராட்டை பெற்ற ஒரு திருடர் இருக்கிறார். கடந்த இரண்டு நாட்களாக பாராட்டை பெற்று வருகிறார் இந்த மிஸ்டர் திருடர்.

சீனாவின் ஹியான் நகரில் ஏடிஎம் பணம் எடுத்துக் கொண்டிருந்த பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டுகிறார் நமது இந்த திருடர். பயந்து போன அந்தப் பெண் பணத்தைக் கொடுத்து விடுகிறார்.

ஆசை யாரை விட்டது?

பெண்ணின் வங்கிக்கணக்கில் இன்னும் பணம் இருந்தால், அதையும் ஆட்டையை போடலாம் என்றோ என்னவோ, பணமீதியை காண்பிக்கும்படி கேட்கிறார்.

அந்த பெண்ணும், வங்கி மீதியை காண்பிக்கிறார். கணக்கில் சல்லிக்காசு இல்லை.

பெண்ணின் நிலையை கண்டு திருடருக்கு இரக்கம். கொள்ளையிட்ட பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டு, சிரித்தபடியே சென்று விடுகிறார்.

இந்த காட்சிகள் அங்குள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகள் வெளியாகி, வைரலாகி வருகிறது.

ஆனால், திருடிய பணத்தை திருப்பிக் கொடுத்து நல்ல பெயர் வாங்கினாலும், “திருடர்“ திருடன்தானே. அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here