4வது ஒருநாள் போட்டி… வழக்கமான முடிவு!

நான்காவது ஒருநாள் போட்டியிலும் இலங்கைக்கு செமத்தியான உதை கொடுத்துள்ளது தென்னாபிரிக்கா. இதன்மூலம், வைட்வோஷ் சம்பவம் இடம்பெறப் போவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது போலத்தான் தெரிகிறது.

போட்எலிசபத் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 39.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கையின் முன்வரிசை வீரர்கள் வருவதும் போவதுமான, அணிநடையில் ஈடுபட பந்துவீச்சாளர் இசுறு உதான மட்டுமே அதிக பட்சமாக 78 ஓட்டங்களை பெற்றார். அடுத்ததாக, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ 29 ஓட்டங்கள், தனஞ்ஜெய டி சில்வா 22 ஓட்டங்கள்.

பந்து வீச்சில் நொற்ரிஜி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 32.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

மீண்டும் மிரட்டிய டி கொக் 51, டு பிளெஸிஸ் 43 ஓட்டங்கள்.

பந்து வீச்சில் தனஞ்ஜெய டி சில்வா 3 விக்கெட்டுக்கள்.

ஆட்டநாயகன் இசுறு உதான.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here