ரஷ்மிகா ஆர்மிக்கு இனிப்பான செய்தி!

தேவ் படத்தின் தோல்விக்கு பிறகு கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் கைதி. வித்தியாசமான கதை அம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. இதையடுத்து, ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. இதன் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் இன்று (13) ஆரம்பமானது. எமோஷன், ஆக்ஷன் கலந்த காமெடி கதையான இப்படத்தில், கார்த்தி ஜோடியாக ரஷ்மிகா, தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் யோகி பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

விவேக் – மெர்வின் இசை, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு, ரூபன் – படத்தொகுப்பு. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்கள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here