வவுனியா மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவு

வவுனிய மாவட்டத்தின் மெய்வல்லுனர் சங்கத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஐயாத்துரை மண்டபத்தில் இடம்பெற்ற மெய்வல்லுனர் சங்கத்தின் பொதுக்கூட்டத்திலேயே புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் தலைவராக த.பத்மசொரூபன் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் செயலாளராக கே.நவநீதனும், பொருளாளராக ரி.கமலனும், உப தலைவர்களாக ரி.எம்.தெய்வேந்திரன், எஸ்.சிவதீபன், ஜெ.சுதாத்தரன், என்.பிரதாஸ், கே.சிவசேகரம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

உப செயலாளராக ரி.விந்துஜன் தெரிவு செய்யப்பட்டார். நிர்வாக உறுப்பினர்களாக ஆர்.சற்சொரூபன், எஸ்.என்.அலுத்வெல்ல, எஸ்.வசீகரன், ஆர்.தர்சிகா, கே.லேகாஜினி, ஆர்.டினோஜன், என்.சிவனேசன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here