சூர்யா பட நாயகி மீண்டும் கர்ப்பம்!

நடிகை சமீரா ரெட்டி மீண்டும் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை சமீரா ரெட்டி தமிழ் சினிமாவில் சூர்யாவுடன் இணைந்து வாரணம் ஆயிரம் படத்தில் நடித்து பிரபலமானவர். அதைத்தொடர்ந்து வெடி, அசல், வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார். இவருக்கும் மகாராஷ்டிராவை சேர்ந்த அக்ஷய் வர்தே என்ற தொழில் அதிபருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், மீண்டும் 4 ஆண்டுகள் கழித்து சமீரா இரண்டாவது முறையாகக் கர்ப்பமாகியிருக்கும் புகைப்படம் ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவிற்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here