முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: மாவை சொன்ன முக்கிய அறிவுரை!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடமாகாணசபைதான் ஒழுங்கமைப்பது பொருத்தமானது, பல்கலைகழக மாணவர்கள் இதில் குழப்பத்தை ஏற்படுத்துவது முறையல்ல- இப்படி யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளிடம் அழுத்திக் கூறியுள்ளார் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தாம்தான் நடத்தி முடிப்போம் என பல்கலைகழக மாணவர்கள் திடீர் போராளிகளாக உருவெடுத்துள்ளதன் பின்னணியை தமிழ் பக்கம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் இருந்து அனுப்பப்பட்ட பணத்தினாலேயே இந்த குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. தமிழ் பக்கம் ஏற்கனவே வெளியிட்ட தகவல்களை தவறவிட்டவர்கள், இங்கே கிளிக் செய்து வாசிக்கலாம்.

இந்த நிலையில், வடமாகாணசபையால் ஒழுங்கமைக்கப்படும் நினைவேந்தலை குழப்பும் முயற்சியிலும் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக, கூட்டமைப்பின் எம்.பிக்களுடன் தொலைபேசியில் பேசி, தமது நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

நேற்றிரவு தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுடன் பல்கலைகழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் தொலைபேசியில் பேச்சு நடத்தினார்கள் இதன்போது, பல்கலைகழக மாணவர்களின் குழப்ப முயற்சிகளை மாவை சேனாதிராசா கடுமையாக கண்டித்துள்ளார். நினைவேந்தலை வடமாகாணசபையே ஒழுங்கமைப்பது முறையென கூறினார்.

வடமாகாணசபையை அரசாங்கம் கலைக்கலாம், இந்த மாகாணசபையின் ஆயுள்காலம் அடுத்த நினைவேந்தல் நிகழ்விற்கும் நீடிக்காது, அதனால் பல்கலைகழக மாணவர்கள்தான் அதனை ஒழுங்கமைப்பது முறையென மாணவர் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். எனினும், இதனை நிராகரித்த மாவை சேனாதிராசா- பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தை கலைக்கும் வாய்ப்புள்ளதை சுட்டிக்காட்சி, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட வடமாகாணசபையே அதை ஒழுங்கமைக்க வேண்டும், மாணவர்கள் யாருடைய தூண்டுதலிலும் செயற்படகூடாதென அறிவுரையும் வழங்கினார்.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here