நடிகை ஏஞ்சலினா ஜோலி பிரான்ஸ் கோடீசுவரரை மணக்கிறார்?

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, பிரான்ஸ் கோடீசுவரரை மணக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி (வயது 43). இவர் 1996ம் ஆண்டு டி.வி. பிரபலம் ஜானி லீ மில்லரை திருமணம் செய்தார். 2000ம் ஆண்டில் விவாகரத்து செய்தார். பின்னர் நடிகர் பில்லி பாப் தாம்டனை 2வது திருமணம் செய்தார். 2000ம் ஆண்டு நடந்த இந்த திருமணம் 3 ஆண்டில் முடிவுக்கு வந்தது. 3வது முறையாக நடிகர் பிராட் பிட்டை 2014ல் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமும் 2016ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

பிராட் பிட்டைப் பொறுத்தமட்டில், அவர் தனது முன்னாள் மனைவி ஜெனிபர் ஆனிஸ்டனுடன் இணைந்து வாழ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் ஏஞ்சலினா ஜோலி 4வது திருமணத்துக்கு திட்டமிட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கோடீசுவரர் சேட்டோ மிராவல் என்பவரை ஏஞ்சலினா ஜோலி திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், பிரான்சில் குடியேறப்போவதாகவும் ‘லைப் அண்ட் ஸ்டைல்’ பத்திரிகை செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏஞ்சலினா ஜோலிக்கு 6 குழந்தைகள் இருப்பதும், அதில் சில குழந்தைகள் தத்து குழந்தைகள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here