இவ்வார ராசி பலன்கள் (10.3.2019- 16.3.2019)

ராகு புதன் சூரியன் சந்திரன் நற்பலன் தருவர். சிறு செயலும் சிறப்பான பலன் தரும். நீதி நேர்மைக்கு முக்கியத்துவம் தருவீர்கள்.தாய்வழி உறவினர்களால் உதவி உண்டு. வெளியூர் பயணத்தால் நன்மை அதிகரிக்கும்.புத்திரர் பெற்றோரின் சொல்லை ஏற்று நடந்து வாழ்வில் முன்னேறுவர்.பூர்வசொத்தில் பெறுகின்ற பணவரவு அதிகரிக்கும்.இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நிறைவேறும். உடல்நிலை சீராகும்.நண்பர்க்கு கடனாக கொடுத்த பணம் கிடைக்கும்.மனைவி வழி சார்ந்த உறவினருக்கு உதவுவீர்கள்.தொழில் வியாபாரம் இடையூறு விலகி லாபம் கூடும். பணியாளர்கள் கடமை உணர்வுடன் பணிபுரிவர்.பெண்கள் தாராளமாக நகை,புத்தாடை வாங்குவர். மாணவர்கள் சிறப்பாக படிப்பர்.

பரிகாரம்: மீனாட்சி வழிபாடு நன்மை தரும்.

சூரியன், புதன், குரு, சுக்கிரனால் நற்பலன் கிடைக்கும். உறவினர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். பணிகளில் தகுதி திறமை பளிச்சிடும். புதிய வீடு வாகனம் வாங்க சிலருக்கு யோகம் உண்டு. பிள்ளைகள் படிப்பு, செயல் திறனில் மேம்படுவர். பூர்வீகச் சொத்தில் பணவரவு கூடும். மனைவி உங்கள் எண்ணங்களை செயல்படுத்துவார். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். தொழில் வியாபார வளர்ச்சியால லாபம் உயரும். சேமிக்க வாய்ப்புண்டு. வெளியூர் பயணத்தால் எதிர்பார்ப்பு நிறைவேறும். பணியாளர்கள் பணியிடச் சூழல் உணர்ந்து செயல்படுவர். நிர்வாகத்தினரின் பாராட்டு கிடைக்கும்.பெண்கள் குடும்ப நலனில் அக்கறை கொள்வர்.மாணவர்கள் படிப்பில் சிறந்து நண்பர்க்கும் உதவுவர்.

பரிகாரம்: சாஸ்தா வழிபாடு சகல நன்மை தரும்.

சுக்கிரன் செவ்வாய் சந்திரன் ஆதாய பலன் தருவர். உங்களை புகழ்ந்து பேசுபவரிடம் நிதானித்து பழகவும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு ஊக்கம் தரும். வீடு வாகனத்தில் உரிய பாதுகாப்பு பின்பற்றவும். புத்திரர் நண்பருக்கு இணையாக பெற்றோரிடம் பழகுவர். குடும்பத்திற்கான செலவுகளில் சிக்கனம் வேண்டும். நோய் தொந்தரவு குறைந்து ஆரோக்கியம் கூடும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும். மனைவியின் கருத்துகளில் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை மிதமாக இருக்கும். பணியாளர்கள் பணியிடச்சூழல் உணர்ந்து செயல்படுவது நல்லது. பெண்கள் தாய்வீட்டு உதவியை கேட்டுப்பெறுவர்.மாணவர்கள் படிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவர்.

பரிகாரம் : சரபேஸ்வரர் வழிபாடு சகல வளம் தரும்.

குரு சனீஸ்வரர் கேது புதன் ராஜயோகபலன் தருவர். பணிகள் சிறந்து நற்பெயரும், புகழும் கிடைக்கும்.புதிய வாய்ப்புக்களை பயன்படுத்தி அதிக பணவரவு காண்பீ்ர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் சொல் மதித்து செயல்படுவர். வீடு வாகனத்தில் உரிய பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றவும். புத்திரர்கள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். கடன் தொந்தரவு குறையும். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவியின் உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி செய்வீர்கள். பணியாளர்கள் பணி இலக்கை எளிதாக பூர்த்தி செய்வர். பெண்கள் கணவரின் ஆதரவுடன் சந்தோஷ வாழ்வு நடத்துவர் .மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும்.

பரிகாரம் : சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

ராகு சந்திரன் நற்பலன் தருவர். திட்டமிட்ட செயல் கால அவகாசத்தில் நிறைவேறும். பொதுவிஷயங்களில் கருத்து சொல்ல வேண்டாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர்கள் பெற்றோரிடம் பிடிவாதமாக நடந்து கொள்வர். இஷ்டதெய்வ வழிபாட்டால் நன்மை காண்பீர்கள். சத்தான உணவை உண்பதும் சீரான ஓய்வும் உடல்நலனைப் பாதுகாக்கும். மனைவியின் ஆர்வமிகு செயலால் குளறுபடி ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் மிதமான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வேண்டாம். மாணவர்கள் பாதுகாப்பு குறைந்த இடங்களில் செல்லக்கூடாது.

பரிகாரம்: ஐயப்பன் வழிபாடு வெற்றியளிக்கும்.

சூரியன் சுக்கிரன் புதன் அனுகூல அமர்வில் உள்ளனர். பலரும் வியந்திடும் வகையில் செயல்படுவீர்கள். பேசும் வார்த்தையில் நிதானம் இருக்கும். வெளியூர் பயணத்தில் பாதுகாப்பு அவசியம். புத்திரர்கள் படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற கூடுதல் பயிற்சி தேவை .தாய்வழி சார்ந்த உறவினர்களின் உதவி கிடைக்கும். விவகாரம் அணுகாத சுமுக வாழ்வுமுறை உருவாகும். மனைவியின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை சீராகும். தொழில், வியாபாரத்தில் சீரான லாபம் கிடைக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பணியாளர்கள் குறித்த காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்கள் தாயாரின் வீட்டுக்கு தேவையான உதவியை வழங்குவர். மாணவர்கள் லட்சியத்துடன் படிப்பில் ஈடுபடுவர்.

சந்திராஷ்டமம்: 10.3.19 காலை 6:00 மணி – 12.3.19 காலை 8:03 மணி
பரிகாரம்: விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

கேது சனீஸ்வரர் குரு சுக்கிரனால் ராஜயோகபலன் கிடைக்கும்.அக்கம் பக்கத்தவர் அன்பு பாராட்டுவர்.முக்கியமான செயல் நிறைவேற இஷ்டதெய்வ அருள்பலம் துணை நிற்கும்.பணவரவும் நன்மையும் அதிகரிக்கும்.தம்பி தங்கைகளுக்கு மங்கல நிகழச்சி நடந்தேறும்.வீடு வாகன வகையில் நற்பலனை எதிர்பார்க்கலாம். புத்திரர் நற்செயல்களால் பெற்றோர்க்கு பெருமை தேடித் தருவர். பகைவர் சொந்த சிரமங்களால் விலகுவர். மனைவி அதிக அன்பு பாசத்துடன் நடந்து கொள்வார். வீட்டில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் கூடும். தொழில் வியாபாரம் செழித்து வளரும்.ஆதாய உயர்வால் சேமிப்பு கூடும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் புத்தாடை, நகை வாங்குவர். மாணவர்கள் படிப்பில் வளர்ச்சி காண்பர்.

சந்திராஷ்டமம்: 12.3.19 காலை 8:04 மணி – 14.3.19 பகல் 1:10 மணி
பரிகாரம்: அம்பிகை வழிபாடு நன்மை தரும்.

சுக்கிரன் புதன் செவ்வாய் சந்திரன் தாராள நன்மையை வழங்குவர்.மனதில் புத்துணர்வு ஏற்படும்.சிரமம் தந்த செயல்கள் வியத்தகு முறையில் நிறைவேறும்.தம்பி தங்கைக்கு தேவையான உதவியை வழங்குவீர்கள். வீடு, வாகனத்தில் உரிய பாதுகாப்பை பின்பற்றவும். புத்திரர்கள் பொதுஅறிவு மற்றும் வேலைத்திறனில் மேம்படுவர். குடும்பத்தேவை பெருமளவு பூர்த்தியாகும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவிவழி உறவினர் பாசத்துடன் பழகுவர். தொழில், வியாபாரத்தில் அதிக உழைப்பால் வளர்ச்சி காண்பீர்கள். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும். பெண்கள் கருத்து ஒற்றுமையுடன் குடும்பநலன் பேணுவர். மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பர்.

சந்திராஷ்டமம்: 14.3.19 பகல் 1:11 மணி – 16.3.19 மாலை 4:38 மணி
பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு மேன்மை தரும்.

சூரியன் சுக்கிரன் சந்திரன் அனுகூல அமர்வில் உள்ளனர். மனம் ஒருமுகத்தன்மையுடன் இருக்கும். சமயோசித செயலால் பணி விரைவாக நிறைவேறும். குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும்.வீடு வாகனத்தில் பராமரிப்பு செலவு கூடும்.புத்திரரின் அறிவுத்திறன் வளர தக்க ஆலோசனை சொல்வீர்கள். சொத்து ஆவணம் பிறர் பொறுப்பில் தர வேண்டாம்.சுற்றுலா சென்று வர திட்டமிடுவீர்கள்.மனைவியின் அன்பு, பாசம் மனதில் நெகிழ்ச்சியை தரும்.தொழில் வியாபாரத்தில் போட்டி குறையும்.அரசு வகையில் உதவி கிடைக்கும்.பணியாளர்கள் பணி இலக்கை நிறைவேற்றுவர்.பெண்கள் விருந்தினரை உபசரிப்பர். மாணவர்கள் லட்சிய மனதுடன் படிப்பர்.

சந்திராஷ்டமம்: 16.3.19 மாலை 4:39 மணி – நாள் முழுவதும்
பரிகாரம்: பைரவர் வழிபாடு சகல நன்மை தரும்.

சுக்கிரன் குரு ராகு சுபபலன் தருவர். பொதுவிஷயத்தில் ஆர்வம் கொள்வீர்கள். மனதில் இருந்த குழப்பமான சூழ்நிலை விலகும்.வீடு, வாகனத்தில் நவீன மாற்றம் செய்வீர்கள்.புத்திரர் உங்கள் கருத்தை ஏற்று செயல்படுவர்.வெளியூர் பயணம் எதிர்பார்ப்புகளை ஓரளவு பூர்த்தி செய்யும்.எதிர்ப்பாளர்கள் சொந்த சிரமங்களால் விலகுவர். உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். மனைவி விரும்பிக் கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள்.தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற புதிய வாய்ப்பு கிடைக்கும். பணியாளர்கள் நன்றாக பணிபுரிந்து நற்பெயர் பெறுவர். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.

பரிகாரம்: முருகன் வழிபாடு தைரியம் வளர்க்கும்.

செவ்வாய் கேது சுக்கிரன் சனீஸ்வரர் நற்பலன் வழங்குவர். உறவினர்களின் உதவி கிடைக்கும். சுறுசுறுப்பாக பணியில் ஈடுபடுவீர்கள்.குடும்பத்தேவை பெருமளவில் நிறைவேறும். புத்திரர் சில விஷயங்களில் பிடிவாத குணத்துடன் நடந்து கொள்வர். சொத்து ஆவணம் பிறர் பொறுப்பில் தரக்கூடாது. நோய் தொந்தரவு குறைந்து ஆரோக்கியம் பலம் பெறும். வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும். மனைவியின் இனிய சொல்லும், செயலும் குடும்பத்தில் ஒற்றுமை வளர்க்கும்.தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணியில் ஈடுபடுவீர்கள். பணியாளர்கள் குறித்த காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்கள் மகிழ்ச்சிகரமாக வாழ்வு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து நண்பர்களுக்கு உதவுவர்.

பரிகாரம்: சிவன் வழிபாடு தைரியம் வளர்க்கும்.

குரு, சுக்கிரன், சந்திரனால் நற்பலன் உண்டாகும். சமூக நிகழ்வுகள் மனதில் நல்ல மாற்றம் தரும். பழகுபவர்களின் மனமறிந்து பேசுவதால் நட்பு பலம் பெறும்.வெளியூர் பயணம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும். புத்திரரின் உடல்நலனில் அக்கறை கொள்வீர்கள். பூர்வ சொத்தில் அளவான பணவரவு கிடைக்கும். விவகாரங்களில் சமயோசித அணுகுமுறையால் சுமுக தீர்வு பெறலாம். மனைவி கூடுதல் அன்பு பாசத்தால் குடும்பநலன் பாதுகாத்திடுவர். தொழில் வியாபாரத்தில் போட்டி குறைந்து லாபம் அதிகரிக்கும்.பணியாளர்கள் தமது கடமையை உணர்ந்து பணிபுரிவர். சலுகை கிடைக்கும். பெண்கள் தாய் வீடடுக்கு உதவுவர். மாணவர்கள் ஆர்வமுடன் படித்து சிறப்பிடம் பெறுவர்.

பரிகாரம்: விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here